வல்வை பட்டப்போட்டி 2017 இல் பரிசுபெற்ற 30 பட்டங்கள் (பெயர் விபரங்கள், படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 16/01/2017 (திங்கட்கிழமை)
நேற்று முன்தினம் வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இடம்பெற்ற பட்டப் போட்டியில் பங்கு கொண்ட பட்டங்களில் 30 பட்டங்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது. பட்டங்கள் மற்றும் பரிசில்கள் பெற்றவர்களின் விபரம் வருமாறு
1. மகேந்திரன் பிரசாந்த் – இராட்சத ஓணான்
2. மகேந்திரன் ஹாசன் – அகதிகள் வண்டி
3. சி.ஸ்ரீராஜ் – பனிச் சறுக்கி வண்டி
4. மகேந்திரன் லக்ஸ்மன் – கிடங்கு தோண்டும் இயந்திரம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
ஞா. மனோகரன் (ஐக்கிய ராஜ்ஜியம்)
Posted Date: January 17, 2017 at 14:03
இன்று எங்களுடைய வல்வெட்டித்துறை.ORG இணையத்தளம் ஏனய அனைத்து தமிழ் இணையத்தளங்களையும்விட மிகவும் புதுப்பொலிவுடன் பளபளக்கிறது.
.
இதுவரைகாலமும் எந்தவொரு இணையத்தளமும் செய்யாத ஒரு புதுமையை இன்று அரங்கேற்றியிருக்கிறீர்கள்.
.
வழமையாக எல்லா தமிழ் இணையத்தளங்களும் படங்களை பிரசுரிக்கும்போது அந்தப்படங்களுக்கு எந்தவிதமான விளக்கக்குறிப்புகளையும் அந்தப்படத்திற்கு மேல் எழுதிப்போடுவதில்லை.
இதனால் அந்தப்படத்தைப்பார்க்கும் பல வாசகர்களுக்கு அந்தப்படத்தைப்பற்றி விளங்கிக்கொள்ளமுடியாமலிருக்கிறது.
அந்தப்படத்தைப்பார்ப்பதிலோயோ அல்லது அதனுடன் வெளியிடப்பட்ட செய்தியை வாசிப்பதிலோயோ ஆர்வம் குன்றிவிடுகிறது.
ஆனால் இன்று நீங்கள் வெளியிட்டுள்ள இ்ந்த செய்திதெடர்பான படங்களுக்குமேலே அந்தப்பட்டத்தின்பெயர் என்னவென்பதையும் அந்தப்பட்டத்தைத்தயாரித்தவரின் பெயரையும் விளக்கக்குறிப்பா தந்திருக்கின்றீர்கள்.
இன்று நீங்கள் செய்திருக்கின்ற இந்தப்புதுமையினால் இந்தப்படங்களைப்பற்றி எம்மால் அதிக அளவில் விளங்கிக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. அந்தப்படங்களை மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டும் ஆவலையும் உருவாக்குகிறது.
.
இன்று நீங்கள் செய்திருக்கின்ற இந்த புதுமை எமது வல்வெட்டித்துறை.ORG இணையத்தளத்தை மற்றய இணையத்தளங்களிலிருந்து ஒரு உயர்ந்தநிலைக்கு இட்டுச்சென்றிருக்கிறது.
இன்று நீங்கள் செய்திருக்கின்ற இந்தப்புதுமையைப்போல மேலும் பல புதுமைகளைச்செய்து எமது வல்வெட்டித்துறை.ORG இணையத்தளத்திற்கு மேலும் பெருமைசேர்க்க வேண்டும் எனவேண்டுகிறேன்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.