உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலுக்கு பெயர் சூட்டும் வைபவம் இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 18/03/2017 (சனிக்கிழமை)
தற்பொழுது உள்ள மிகப் பெரிய கொள்கலன் கப்பல்களை பின்தள்ளி, உலகின் அதி மிகப்பெரிய கொள்கலன் கப்பல் (Ultra large containership) என விளங்கவுள்ள MOL Triumph எனும் கப்பலுக்கு பெயர் சூட்டும் வைபவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
கொரியாவின் Samsung Heavy Industries, Ltd. (SHI) ங்க இனால் ஜப்பானின் MOL கப்பல் நிறுவனத்திற்கு கட்டப்படுள்ள இந்தக் கப்பல் தனது கன்னிப் பயணத்தை (Maiden voyage) எதிர்வரும் 27 ஆம் திகதி தொடங்கவுள்ளது. MOL கப்பல் நிறுவனம் இதையொத்த (Sister ships) மொத்தம் 4 கப்பல்களை வாங்கவுள்ளது.
400 மீட்டர் நீளம், 58.8மீட்டர் அகலம், 32 மீட்டர் ஆழம் என்பவற்றை கொண்டுள்ள இந்தக் கப்பலில் 20,150 TEU (Twenty equivalent units) கொள்கலன்களை காவ முடியும்.
எமது பகுதிகளில் ஓடும் லொறிகளை விட சுமார் 50 வீதம் அதிக கொள்ளளவு சக்தியைக் கொண்டவை ஒரு TEU. மேற்குறித்த கப்பலில் உள்ள 20,150 TEU கொள்கலன்களை வீதியில் நிறுத்தினால் - இவை சுமார் 75 கிலோமீட்டர்கள் நீளம் செல்லும் - அதாவது பருத்தித்துறையில் இருந்து ஆனையிறவு வழியாக கிட்டத்தட்ட கிளிநொச்சி வரை நீண்டு செல்லும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.