உலகின் முதலாவது மின்னில் இயங்கும் பயணிகள் கப்பல் நோர்வேயில் சேவையில்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/05/2015 (வெள்ளிக்கிழமை)
உலகில் முதலாவதான மின்னில் இயங்கும் பயணிகள் கப்பல் (World's first electric car and passenger ferry) நோர்வேயில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 3 மின்கலங்களின் உதவியினால் தொழிற்படும் இந்த பயணிகள் கப்பலின் தொழிற்பாட்டிற்காக ஒரு lithium-ion battery கப்பலிலும், அடுத்த இரண்டு மின்கலங்கள் ஒவ்வொரு இறங்குதுறைகளிலும் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த மின் கப்பல் நோர்வேயின் Sognefjord ற்கு குறுக்கே Lavik மற்றும் Oppedal ஆகிய இடங்களிற்கிடையே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. முற்றுமுழுதாக மின்கலத்தின் சக்தியில் இயங்கும் இந்தக் கப்பலானது Sognefjord ற்கு குறுக்கேயான 6 கிலோமீட்டர் தூரத்தை ஒரு நாளைக்கு 34 தடவைகள் கடந்து வருகின்றது. ஒரு முழுப் பிரயாணத்திற்கு இக்கப்பல் 20 நிமிடங்கள்வரை எடுக்கின்றது.
80 மீட்டர் நீளம் மற்றும் 20 மீட்டர் அகலம் கொண்ட இந்த பயணிகள் கப்பல், 450 கிலோவாற் கொண்ட 2 மின் இயந்திரங்களைக் கொண்டுள்ளது. 10 ரொன் நிறையுடைய மின்கலம், 360 பயணிகள் மற்றும் 120 கார்கள் ஆகியவற்றின் பாரத்தைக்
கொண்டிருந்தாலும், பிரத்தியேகமாக அலுமினியத்தினால் இது வடிவமைக்கப்பட்டுள்ளதால், வழமையான பயணிகள்
கப்பலை விட இது அரைவாசி நிறை குறைந்ததாக அமைந்துள்ளது.
பூமியில் வெளிவிடப்படும் காபநீரொக்சைட்டின் அளைவைக் குறைக்க, வளர்ந்த நாடுகள் எப்படியெல்லாம் முயற்சிக்கின்றன என்பதன் ஒரு வடிவமே இந்த மின்கலத்தினால் இயங்கும் பயணிகள் கப்பல்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.