உலகின் மிகப் பெரிய கொள்கலன் துறைமுகம் (World's largest automated container terminal) சீனாவின் சங்காய் பகுதியில் அமைந்துள்ள யங்ஷான் ஆழமான துறைமுகத்தையொட்டி (Shanghai Yangshan Deep Water Port) திறக்கப்பட்டுள்ளது.
Ghost Port அதாவது பேய் துறைமுகம் என வர்ணிக்கப்படும் இந்த துறைமுகத்தின் கொள்கலன்கள் கையாளப்படும் பகுதிகளில் எனைய துறைமுகங்களில் உள்ளது போன்று பணியாட்கள் எவரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய துறைமுகத்தினால் துறைமுகத்தை கையாளும் திறன் அதிகரிப்பது மட்டுமல்லாமல் சூழலை மாசுபடுத்தக் கூடிய கார்பன் வாயுவின் வெளியேற்றமும் 10 வீதத்தால் குறையும் எனக் கூறப்பட்டுள்ளது.