Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

ஆதவன் பக்கம் (48) – அடிக்கடி வரும் கனவு

பிரசுரிக்கபட்ட திகதி: 07/12/2018 (வெள்ளிக்கிழமை)
க.பொ.த (உ/த) பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரம். பரீட்சை 8 மணிக்கு ஆரம்பமாகின்றது. பஸ்ஸை விட்டுவிட்டேன்.
 
க.பொ.த (உ/த) பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நேரம் முடிந்து விடைத்தாளைக்   கொடுக்க வேண்டிய நேரத்தில் அரைவாசி கேள்விகளுக்கு கூட விடை எழுதவில்லை.
 
நாளை பரீட்சை, ஆனால் இன்று அரைவாசிப் பாடங்களைக்கூட படித்து முடிக்கவில்லை. 
 
வினாத்தாள்களை தருகின்றார்கள், 10 கேள்விகளில் ஒன்றுக்குக் கூட எனக்கு விடை தெரியவில்லை. 

0830 ற்கு பரீட்சை ஆரம்பம், நான் 0835 ற்குப் பிந்திப் போகின்றேன். பரீட்சை நிலையத்தை மாற்றியுள்ளதாக கூறி போக வேண்டிய இடத்தைக் கூறுகின்றார்கள். பரீட்சை நிலையத்தை நோக்கி ஓடுகின்றேன், ஒரே வெளியாக உள்ளது. 

நடுத்தர குடும்பம், பின்புல சொத்துக்கள் என்று எதுவுமில்லை. என்யினியர் கனவு அவ்வளவுதான்  வாழ்க்கையே சூனியம் ஆகின்றது.  

துடித்து எழும்புகின்றேன். கப்பல் கடலில் சென்று கொண்டிருக்கின்றது. தற்பொழுது உள்ள என்  தகமையை நினைத்து திருப்திகொண்டு மீண்டும் தூங்குவேன். 

கடந்த சில நாட்கள் முன்பு ஒரே இரவில் இரண்டு கனவுகள், இரண்டும் பரீட்சை பற்றியவை. முதலாவது கனவை முழுமையாக நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை. ஆனாலும் எனது வகுப்பு நண்பர்கள் வெளிநாடுகளில் இருந்து பரீட்சைக்கு இலங்கை வருவது மட்டும் பகுதியாக ஞாபகம். இரண்டாவது கனவு – ஹாட்லிக்கு பரீட்சைக்குச் செல்கின்றேன். அங்கு சாரத்துடன் பரீட்சைக்கு வந்துள்ளதைப் பார்த்து  சாரத்தை மாற்றி வரச் சொல்கின்றார்கள். 0830 க்கு பரீட்சை. அப்பொழுது மணி 0820. என்ன செய்வது என யோசித்துப் பார்த்து -தூக்கத்தில் இருந்து எழும்புகின்றேன்.

சில மாதங்களுக்கு ஒரு தடவையாவது இப்பொழுதும் என்னைத் தொடர்ந்து துரத்தும் கனவு இது.

க.பொ.த (உ/த) வில் கணித பாடம் படித்தேன். 90 Batch. சகலருக்கும் வரும் எதிர்பார்ப்பு, கனவு போல் எனக்கும் என்சினியர் கனவு. பலரிடம் சென்று படித்தேன். ஆனால் படிப்பதில், படிக்கும் முறையில் சொதப்பி விட்டேன் என்று நினைக்கின்றேன். 
 
வேலாயுதம் மாஸ்டர், தில்லையம்பலம் மாஸ்டர், நல்லையா மாஸ்டர், வர்ணகுலசிங்கம் மாஸ்டரிடம் மட்டும் மூன்று இடங்களில் (வல்வை கல்வி மன்றம், உடுப்பிட்டியில் பீக்கன், யாவாரிமூலையில் அவர் வீட்டில்)
 
இதை விட சந்திரிக்கா ரீச்சர், அவர் கணவர் திரு.நாகேந்திரம், சிவலீலன் அண்ணா, திவா அண்ணா, நந்தன் அண்ணா என சிலரிடம் பகுதியாக.
 
ஏராளமான குறிப்புக்களைச் சேர்த்திருந்தேன். படிக்க வேண்டிய பொறுத்த நேரத்தில் வீதிக்கு வந்ததால் வந்த வினை. முதலாவது முயற்சியில் C, 2S. அடுத்த இரண்டு முறைகளிலும் C, 3S. 
 
என்ஜினியர் ஆகமுடியாமல் போய்விட்டது. இனிமேல் என்ன செய்யப் போகின்றேன் என்று மிக மிக நொந்து போய்விட்டேன். அதன் தாக்கம் தான், இன்று வேறு ஒரு துறையில் நல்ல ஒரு நிலையை அடைந்தாலும், என்னை கனவில் தொடர்ந்து துருத்திவருகின்றது. 
 
என்ஜினியர், வைத்தியர், கணக்காளர் இந்த மூன்றும் தான் இதை விட வேறு ஒன்றுமில்லை – ஆசிரியர்களும் எனது பெற்றோர்களும், என்னைப் போன்றவர்களுக்கு கூறத்தவறிய விடயம். எனது தந்தையார் தனது சிறு வயதில் தான் பல்கலைக் கழகம் செல்லாமல் பின்னர் வெளி வாரியாக படித்துப் பட்டம் பெற்றதால், பிள்ளைகள் நாங்கள் பல்கலைக் கழகப் பட்டம் பெறவேண்டும் என்பதை மட்டுமே கூறி வந்தார். நல்ல விடயம் தான். நடுத்தர குடும்பத்தினருக்கு சாத்தியமான ஒன்றும் இதுதான். ஆகவே தந்தையாரில் குறைபட முடியாது.
 
ஆனாலும் பிளான் A தவறினால், பிளான் B என்ற ஒன்றை அவர் வைத்திருக்கவில்லை. பல பெற்றோர்கள் விடும் தவறு இது. A/L படித்த பின்னர் பல்கலைக் கழக வாய்ப்பு இல்லாத பலர் இன்றும் குழம்புவதற்கு இதுதான் காரணம். நாட்டின் கல்விக் கட்டமைப்பும் ஒரு காரணம்.
 
மேல் உள்ள விடயத்தைக் குறிப்பிடவே எனது கனவை பகிர்ந்துள்ளேன். A/L எடுத்து இன்று 25 ஆண்டுகள் கடந்த பின்பும் கனவு தொடர்ந்து வருமளவிற்கு இந்த விடயம் என்னைப் பாதித்துள்ளது. 
 
எல்லோரிடமும் திறமை உள்ளது. ஆனால் பலருக்கு சந்தர்ப்பங்கள் சரியாக வராமல் போய்விடுகின்றது. நான் சரியான நேரத்தில் எடுத்த முடிவும், அதிஸ்டமும் என்னை கப்பலிலும், பாம்பேயிலும் கொண்டுசென்றுவிட்டது.
 
நாங்கள் யாழ்பாணத்தில் ஆங்கில மீடியத்தில் படிக்கவில்லை, ஆனால் இந்தியாவில் ஆங்கில மீடியத்தில் படித்து எழுமளவிற்கு எனக்குள் திறமை இருந்துள்ளது. இலங்கை A/L கணித பாடம் மிகவும் தரமானது என்பதை இந்தியாவில் படித்தபொழுது தெரிந்துகொண்டேன். அன்று ஓடி, ஓடி பலரிடம் A/L Maths படித்தது எனது Nautical படிப்பை மிகவும் இலகுவாக்கியிருந்தது.
 
எங்கள் சீனியர் ரமேஸ் அண்ணா (கப்டன் ரமேஸ், பாங்கரின் மகன்) பாம்பேயில் ஒன்றாக இருந்த பொழுது ‘ஆதவன் நாங்கள் இங்கு படிப்பதைப் போல் அங்கு ஊரில் அரைவாசி படித்திருந்தாலே என்ஜினியராக வந்திருப்போம்’ என்று அடிக்கடி கூறுவார்.
 
பொம்பேயில் எங்களுக்கு இருந்த அழுத்தம், பொறுப்பு, ஊரில் A/L படித்த பொழுது இருந்திருக்கவில்லை. 
 
இப்பொழுதும் பல A/L படிக்கும் மாணவர்களை ஊரில் பார்கின்றேன். அநேகர் நாங்கள் விட்ட அதே பிழையை விட்டுத்திரிகின்றார்கள் (வெளியாகும் முடிவுகளும் இதற்குச்சான்று). நல்ல காலம் நாங்கள் A/L எடுத்த காலங்களில் FB, Whatsup என்று ஒன்றுமில்லை. தெரிந்த ஒன்று இரண்டு பேருக்கு புத்திமதி கூற வெளிக்கிட்டேன், கேட்கின்றார்கள் இல்லை. வெடாவில் 'கட்டாயம் வர வேண்டும்' (Compulsary attendance) போன்ற கண்டிப்பைத் தவிர, வேறு மட்டங்களில் பெரிதாக இருப்பதாகத் தெரியவில்லை.
 
என்ஜினியர், வைத்தியர், கணக்காளர் என்ற மூன்று துறைகளை விட நூற்றுக் மேற்பட்ட துறைகள் உள்ளன என பாடசாலை, சமூக மற்றும் பெற்றோர் மட்டத்தில் மாணவர்களுக்கு சொல்லப்படவேண்டும். படிக்கின்ற காலத்தில் இருத்திப்படிப்பிக்கவேண்டும். எனக்கு வரும் கனவு போல் வேறும் பலருக்கும் வரக்கூடாது. இது ஒரு துன்பவியல் நிகழ்வு.
 
சிரிப்புக்காக நான் இந்தப் பக்கத்தை எழுதவில்லை, சிந்திப்பதற்காகவே எழுதியுள்ளேன். எனது நல்ல நேரம் A/L இல் சொதப்பினாலும் அது சார்ந்த ஒரு துறையில் முன்னுக்கு வந்துவிட்டேன். வராதவர்கள் நிலை?
 
குறிப்பு 

எனது எண்ணத்தில் இருந்தவை சிலவற்றை உங்களுக்கும் பகிர எண்ணி கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து பதியவிட்டுள்ளேன்.  இன்னும் சில விடயங்களை பதிய விரும்புகின்றேன்  - ஒரு இடைவெளியின் பின்னர்.

தொடர்ந்து எனது பக்கங்களை வாசித்து கருத்துக்களைப் பகிரந்த அனைவருக்கும் எனது மனமாரந்த நன்றிகள்.

 
கப்டன் அதிரூபசிங்கம் ஆதவன் 
தொலைபேசி – 00 94 777 64 99 55 (Viber, Whats up)
மின்னஞ்சல்   - marinerathava@yahoo.com
Facebook – athiroobasingam.athavan

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
Thevarajah Sivakumarasamy (Sri Lanka) Posted Date: December 11, 2018 at 17:00 
Dear Athavan,

All of your releases are good and best advice to the community and students. Keep it up to improve the life styles of our community and best performance in education.

As you aware I am in a charity organization at Point Pedro, Velummayilum Foundation supporting many school in Point Pedro for improve the education level of the poor students. We do support Hartley & MGHS student GCE A/L & OL additional classes per month over 100 thousand rupees. as well as for Hartley hostel students funding for additional expenses and education.
My humble request all the millionaire from VVT living around the world to consider support for GCE O/L & AL education and university going students support as well.
Thanks... T. Sivakumarasamy (Kannan)

Thurailingam (UK) Posted Date: December 08, 2018 at 14:49 
நன்று கூறினீர்கள். கப்டன் ஆதவன்,
இங்கு இங்கிலாந்தில் பணம் நன்கொடை செய்யும் பலரிடம் (சிலர் மிகவும் படித்தவர்கள்) பேசிப்பார்த்தேன். அவர்கள் ‘வலது கை கொடு;ப்பது இடது கைக்கு தெரியாது’ என்ற வாக்குககில் கூறியது போன்ற பெரிய மனதுடன் கொடுக்கிறார்கள். பணம் எப்படிச் செலவு செய்யப்படுகின்றது என்பதில் அவ்வளவு கவலைப்பட முடியவில்லை (அவர்களுக்கு அவகாசமும் இல்லை) நன்கொடை கேட்கிறார்கள் கொடுக்காவிட்டால் ஊர்ப்பகை வேண்டாம் என்று கொடுக்கிறார்கள். நான் இங்கு எழுதுவதற்காக, கொடுப்பவர்கள் கோபப்படத் தேவையில்லை. கொடுக்காமல் இருக்கவும் வேண்டாம். கொடுங்கள் அத்தோடு ஊர் படிப்பு, திறமை, வயது வந்தோர் தொழிற்கல்வி என்பவற்றிலும் நவீனமயமாக வேண்டும் என்பதையும் வற்புறுத்துங்கள்.
நலம் விரும்பும் நன்கொடையாளர்கள் சிலரிடம், நீங்கள் பணம் கொடுப்பதைப் போல இங்கிலாந்தின் படிப்பு முறையை அல்லது உழைப்பு முறையையும் சேர்த்து கொடுப்பதற்கு வழி இல்லையா என்று கேட்டேன். விடையாக மௌனம்தான் கிடைத்தது.
பணத்துடன் சிறந்த படிப்பு முறை சிறந்த தொழிற்கல்வி நவீன வியாபார முறை நவீன சுற்றுலா போன்றவைற்றை வெளிநாட்டிலிருந்து தருவிக்க்க வேண்டும். அதற்கு வெளிநாட்டு நன்கொடையாளர் வற்புறுத்த வேண்டும். உள்நாட்டு பெரியோர்கள் சிந்திக்க வேண்டும். ஊர் பெரியோர்களே நீங்கள் நினைத்தால் நடக்கும். நினைப்பீர்களா? உலகத்திலேயே மிகவும் சிறந்த கல்விமுறை உள்ள வெளிநாட்டு நன்கொடையாளர்களிடம் பணத்திற்குப் பதிலாக சிறந்த கல்விமுறையை கேட்க வேண்டாமா?
உதாரணத்திற்கு இங்கு இங்கிலாந்தில் கப்பற்துறையில் மாத்திரம் 200க்கும் அதிகமான வித்தியாசமான படிப்பு வகைகள் உண்டு. இவை எப்போ ஊர்மக்களுக்கு தெரியவரும் அது தெரியவந்து எப்போது அவற்றின் படிப்பு முறை ஊருக்கு வரப்போகின்றது என்று அங்கலாய்கின்றேன்.
இங்கு இங்கிலாந்தில் பிறெக்சிற் என்ற பிரச்சினையினால் சுமார் ஒரு மில்லியன் சிறந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுகிறது. இதை ஊரில் உள்ளவர்கள் பயன்படுத்த முடியுமோ என்று தெரியவில்லை.
அதுவரை உங்களைப் போன்று நவீனத்தைää முற்போக்கை விரும்புபவர்கள் எல்லோரும் வெளிநாட்டுப் படிப்பு முறை ஊருக்கு வரவேண்டும் என்று எழுதவேண்டும். ஊரைப் பகைக்கக் கூடாது என்ற கூற்றை விட்டு எழுதிக்கொண்டு இருக்க வேண்டும்.
கப்டன் துரைலிங்கம்.


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


 இந்த செய்தி தொடர்புபட்ட எமது முன்னைய செய்திகள்:
ஆதவன் பக்கம் (22 ) – 'பழனியப்பா' எனும் மகத்தான மனிதர்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/08/2020 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (47) – முழுமையாகாத பக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/11/2018 (வியாழக்கிழமை)
ஆதவன் பக்கம் (46) – வடமராட்சிகிழக்கின் பூர்வீகச் சொத்துக்களை அழிக்கும் நாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/11/2018 (ஞாயிற்றுக்கிழமை)
ஆதவன் பக்கம் (45) – கப்டன் ஒப் தி ஷிப்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/11/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (44) – ஆபத்தான வயர்களும் வாணவேடிக்கைகளும்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/11/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (43) – கவிழ்ந்த தேரும் நிமிர்த்திய திறமையும்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/11/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (42) - 'அப்பாடா' என கூறவைக்கும் செய்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 28/10/2018 (ஞாயிற்றுக்கிழமை)
ஆதவன் பக்கம் (41) - ரமணனும் சகோதரிகளும் ஒரு உதாரணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/10/2018 (ஞாயிற்றுக்கிழமை)
ஆதவன் பக்கம் (40) - மாயமான வள்ளம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/10/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (39) - தண்ணீர் தண்ணீர் தண்ணீர் - யாழின் நீர்த் தட்டுப்பாடு
பிரசுரிக்கபட்ட திகதி: 06/10/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (38) - விவிரி ஜங்ஷன்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/09/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (37) - சிறந்த உற்றார்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/09/2018 (ஞாயிற்றுக்கிழமை)
ஆதவன் பக்கம் (36) - கழகங்கள் கலைக்கப்பட வேண்டும்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (35) - ஒரு குடும்பத்தின் வாழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2018 (திங்கட்கிழமை)
ஆதவன் பக்கம் (34) – அன்னதானத்துக்குப் பட்டபாடும், அன்னதானம் படும்பாடும்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/09/2018 (திங்கட்கிழமை)
ஆதவன் பக்கம் (33) – இவர்கள்தான் கெளரவிக்கப்படவேண்டும்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/08/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (32) - Hats off ஜெயா
பிரசுரிக்கபட்ட திகதி: 18/08/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (31) – வல்வையில் துறைமுகத்துக்கான சாத்தியங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/08/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (30) – யாழிலும் யூனிவேர்சல் பழங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/08/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (29) – ஊரில் பணப்புழக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/07/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (28) - அக்கௌன்டன்ட் குமாராசாமி
பிரசுரிக்கபட்ட திகதி: 21/07/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (27) – உண்மைச் சம்பவம் - ஐயாவும், ஆஞ்சநேயர் சாமியாரும்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/07/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (26) – கண்டன் ஆச்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 07/07/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (25) – யாழ்ப்பாணத்தாரின் ஒழுங்கைகளும் சுவர்களும்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/06/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (24) – கப்பல் வாங்கிய நம்மவர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/06/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (23 ) – யாழ்ப்பாணக் குப்பைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/06/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (21) – சுமந்திரனுக்கு வல்வையில் மாலை, 'Shame' மா?
பிரசுரிக்கபட்ட திகதி: 02/06/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (20) – கஸ்புஸ்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/05/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (19) – மதுராவும் வல்வையும்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/05/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (18) – இந்திரவிழாவில் நான் கண்ட 17 குறைபாடுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (17) – பாணாக்கம், மோர், தயிர்ச்சோறு, சர்பத்..........
பிரசுரிக்கபட்ட திகதி: 05/05/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (16) – ஒரு முதுசத்தின் மறைவு (காணொளி இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 21/04/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (15) – கப்பல் மாப்பிள்ளை
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (14 ) – வல்வை வரைபடத்தில் முதலாவதாக ரேவடிப் பூங்கா
பிரசுரிக்கபட்ட திகதி: 07/04/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (13) – நான் ஒரு மரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/03/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (12 ) – இங்கு ஆங்கிலம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/03/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (11) – கொட்டப்பட்ட இ வேஸ்ற்றுக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/03/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (10) – இசை நிகழ்ச்சியால் வல்வையில் மழுங்கடிக்கப்படும் பாரம்பரியங்களில் ஒன்று
பிரசுரிக்கபட்ட திகதி: 09/03/2018 (வெள்ளிக்கிழமை)
ஆதவன் பக்கம் (9 ) – பழைய இரும்பு பித்தளைக்கு பேரீச்சம்பழம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/03/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (8) – தடுமாறும் தமிழர் தமிழ் பெயர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/02/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (7) – வேதா ரீச்சரும் மதுரா அக்காவும்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/02/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (6) உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள், 3 வருடங்கள் முன்பு நான் விரும்பியது
பிரசுரிக்கபட்ட திகதி: 12/02/2018 (திங்கட்கிழமை)
ஆதவன் பக்கம் (5 ) – மயிலிட்டி என்னும் சோகம், நேரடிப்பாதை வல்வைக்கு வளம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/02/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (4 ) – நகரபிதாவிற்கு………………….பொது மக்கள் சார்பில் 101 கோரிக்கைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (3) - M.K.சிவாஜிலிங்கம் - நான் அறிந்த ஊரின் சேவகன் -
பிரசுரிக்கபட்ட திகதி: 27/01/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (2) – அரிப்பும், அழிப்பும்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/01/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (1) – ஐயா
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/01/2018 (வெள்ளிக்கிழமை)

பிந்திய 25 செய்திகள்:
நீச்சல் போட்டியில் தனுஜா தங்கம் வென்றார்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
VEDA ஆடி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி மகா கும்பாபிஷேகம் விஞ்ஞாபனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
VEDA ஆனி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
இலங்கையின் நீர் வளங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
சிறந்த கணக்கறிக்கை மற்றும் வருடாந்த அறிக்கைகள் தொடர்பான மதிப்பீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
ஆதவன் பக்கம் - (72) - யாழ்ப்பாணத்து You tube காரர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி. சின்னத்தங்கம் வைரமுத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
யாழ் - தமிழகத்தை நோக்கி நகரவுள்ள தாழ்முக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
ஆசிய பளுதூக்கலில் 3 ஆம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2024 (செவ்வாய்க்கிழமை)
டெங்கு தொடர்பான விழிப்புணர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2024 (செவ்வாய்க்கிழமை)
சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2024 (திங்கட்கிழமை)
இளைஞர் யுவதிகளிற்கான வேலைவாய்ப்பு வழிகாட்டல் கருத்தரங்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2024 (திங்கட்கிழமை)
சிறந்த மனவிருத்தி பாடசாலையாக தேர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2024 (திங்கட்கிழமை)
மாற்ற அரசியலும்....வலி.வடக்கு மீள்குடியேற்றமும்..
பிரசுரிக்கபட்ட திகதி: 08/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
வாங்காள விரிகுடாவில் மீண்டும் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/12/2024 (வெள்ளிக்கிழமை)
பலாலி விமான நிலையத்தில் அசெளகரியங்கள் எனின் முறையிட தொலைபேசி இலக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/12/2024 (வெள்ளிக்கிழமை)
Chess போட்டியில் கஜிஷனா 2 ஆம் இடத்துக்கு முன்னேற்றம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/12/2024 (வியாழக்கிழமை)
ஈழத்து கூத்தாளுமை அண்ணாவி பொன்னம்பலம் காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 05/12/2024 (வியாழக்கிழமை)
மரண அறிவித்தல் - கீர்த்தனா ராஜ்குமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2024 (செவ்வாய்க்கிழமை)
கலைச்சோலை வருடாந்த நாட்காட்டி 2025 (தரவிறக்கம் செய்யலாம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2024 (செவ்வாய்க்கிழமை)
சண்முகத்தின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 02/12/2024 (திங்கட்கிழமை)
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 02/12/2024 (திங்கட்கிழமை)
தியாகங்களின் பெறுமதி?
பிரசுரிக்கபட்ட திகதி: 29/11/2024 (வெள்ளிக்கிழமை)
வல்வைக்கு கடற் தொழில் அமைச்சர் விஜயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/11/2024 (வெள்ளிக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Jul - 2012>>>
SunMonTueWedThuFriSat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai