திருமதி தர்மராசா விஜயலட்சுமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
பிரசுரிக்கபட்ட திகதி: 06/07/2013 (சனிக்கிழமை)
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருச்சி இராமலிங்க நகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த தர்மராசா விஜயலட்சுமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்மைவிட்டு எங்கு சென்றீர்கள் அம்மா!
எங்களைவிட்டு பிரிந்திடவே உங்களுக்கு
என்றும் மனம் வராதே!
ஓராண்டு என்ன ஓராயிரம் ஆண்டுகள் சென்றாலும்
ஐயகோ எம் துன்பம் ஆறாது ஆறாது!
எழுந்தோடி எம்கண்முன் வந்து நின்றீர்களே!
ஏங்குகிறது எம் உள்ளங்கள்.....
சொல்லாத சோகங்கள் ஆயிரம் எம் நெஞ்சுக்குள்
அது செல்லு செல்லாய் அரிப்பது எவருக்கும் தெரியாது
அதற்குதான் மருந்துண்டோ எம் தாயின் அன்பைத்தவிர.....
இவ்வுலகில் நாம் வாழ உடல் தந்த
தனது உதிரத்தை பாலாக்கி அன்பும் பண்பும் கலந்து உயிர் வாழவைத்து
அல்லும் பகலும் எம் வாழ்வுக்கு
உங்களை அர்பணித்த எம் தியாகத்தின் இருப்பிடமே
எம் வாழ்வுக்கு வழிகாட்டிய எம் தெய்வமே...
எங்களை எல்லாம் விட்டுப்பிரிந்து
விண்ணுலகம் சென்றாலும் உங்கள் பசுமையான நினைவுகள்
என்றும் எங்களுடன் வாழ்ந்து கொண்டேயிருக்கும்......
உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கும்
கணவன், பிள்ளைகள், மருமக்கள் பேரப்பிள்ளைகள்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி
அன்னாரின் முதலாம் ஆண்டு ஆத்மசாந்தி பிராத்தனை 06-07-2013 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று அதனை தொடர்ந்து நடைபெறும் விருந்து உபசாரத்திலும் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:-
இல-2, விஜயலட்சுமி இல்லம்,
ராமன் நகர்,
இராமலிங்க நகர் தெற்கு விஸ்தரிப்பு
புத்தூர்,
திருச்சி-620017.