தமிழ் மாநில லீக் உதைபந்து - பருத்தித்துறை லீக் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 23/07/2016 (சனிக்கிழமை)
வடமராட்சி உதைபந்தாட்ட லீக் நடாத்தும் தமிழ் மாகாண முதன்மை லீக் அணிகளுக்கிடையிலான சுற்று போட்டியின் 2016- ஆரம்பவிழா இன்று பிற்பகல் 3:00 மணியளவில் கழுகுகள் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்வில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உபதலைவர் கிளிபேர்ட் அன்ரனிப்பிள்ளை , முன்னாள் வடமாகாண கல்வி பணிப்பாளர் அருணகிரிநாதன், வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்துசிறப்பித்தார்கள்.
இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் பருத்தித்துறைலீக் அணி மடுமாந்தை லீக் அணியுடன் மோதியது. இவ்வாட்டத்தில் பருத்தித்துறைலீக் அணி 10:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவானது.
பருத்தித்துறை லீக் அணி சார்பில் 3கோல்களை அடித்து அவ்வணி வீரன் காண்டீபன் சிறப்பாட்டகாரர் விருதை தட்டிசென்றார். இவருக்கான விருதையும் பணபரிசையும் முன்னாள் பருத்தித்துறைலீக் அணித்தலைவர் தேவசிகாமணி வழங்கினார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.