சில ஊடகங்களில் வந்த செய்திகளுக்கு திரு.சிவாஜிலிங்கம் மறுப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 28/12/2013 (சனிக்கிழமை)
நேற்று வல்வை நகரசபை வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது நகரசபை வளாகத்துக்கு முன் இடம்பெற்றிருந்த சம்பவத்தில் தனக்கு எதிராக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் திரு.எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் திரு.சிவாஜிலிங்கம், அங்கு நின்றிருந்த பொலிஸாரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களை கலைக்குமாறு வேண்டியதாகவே சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதனை தான் வன்மையாக மறுப்பதாகவும், தான் பொலிஸாரிடம் அவ்வாறு கோரவில்லை எனவும் திரு.சிவாஜிலிங்கம் அவர்கள் சற்று முன்னர் எம்மிடம் தெரிவித்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.