மவுசாகலை நீர் தேக்கத்தால் மூடப்பட்ட இந்துக் கோவில், பௌத்த விகாரை, மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல் என்பன, நீர்த்தேக்கத்தில் உள்ள நீர்வற்றுவதால் மீண்டும் மக்களின் கண்களுக்கு தெரிகின்றது.
மஸ்கெலியா (Maskeliya) பழைய நகரில் இருந்த இந்து கோவில், பௌத்த விகாரை மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல் மூன்று வழிபாட்டுத் தலங்களும் மவுசாகலை நீர் தேக்கம் ஆரம்பிக்கும் போது நீரினால் மூடப்பட்டிருந்தன.
தற்போது மவுசாகல நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 140 அடியிலிருந்து 40 அடிக்கு குறைவடைந்ததால் மூன்று சமய வழிபாட்டுத் தலங்களும் தற்போது தெரியவந்துள்ளது.
மவுசாகல இலங்கையில் அமைந்துள்ள 3 பாரிய நீர்த்தேக்கங்களான றந்தினிகல (Randenigala), மவுசாகல(Maussakele), உடவளவை (Udawalawe) ஆகியவற்றில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.