மிக மோசமான கடும்குளிர் காரணமாக அமெரிக்கா மற்றும் கனடாவில் 21 பேர் மரணம். நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்தது!
பிரசுரிக்கபட்ட திகதி: 10/01/2014 (வெள்ளிக்கிழமை)
மனிதனின் எலும்புகளுக்குள்ளும் புகுந்து தாக்கும் மோசமான குளிர் இந்த முறை அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளைத் தாக்கியுள்ளது - இவ்வாறுதான் அநேகமான ஆராய்ச்சியாளர்கள் இன்று இந்தக் கடும் குளிரை விமர்சசித்திருக்கின்றார்கள்.
இறந்தவர்களில் 5 பேர் வீடு வாசலில் பனிக்கட்டிகளை அப்புறப்படுத்தும் போது பரிதாபமாக உயிரை விட்டுள்ளனர். இதைவிடப் பலர் தமக்கென வீடு இல்லாதவர்கள், பாலங்களுக்கு கீழும் தெருவோரங்களிலும் தமது அன்றாட வாழ்க்கையை நடத்துபவர்கள்.
தகுத்த நேரத்தில் இவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு போகும் படி அறிவித்தல் கொடுத்திருந்தும் இவர்களின் அலட்சியத்தினால் பரிதாபமாக உயிரைவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன.
நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்தது
உலகத்தின் புகழ்பெற்ற பெரும் நீர்வீழ்ச்சியான கனடாவில் அமைந்துள்ள நயாகரா நீர்வீழ்ச்சியின் வேகம், சாதாரண நீர்வீழ்ச்சிகள் போலல்லாது பெரும் ஓசையையுடன் கூடிய பலத்த வேகத்தை உடையது. அப்படிப்பட்ட பெரும் நீர்வீழ்ச்சியே நேற்று 09/01/2014 வியாழக்கிழமை, கடும் குளிர் காரணமாக அப்படியே உறைந்து போகும் அளவிற்கு குளிர் இந்த வருடம் மிக மோசமாக அமைந்துள்ளது.
பூமியின் வட துருவம் (Northern hemisphere) அதன் குளிர் காலத்தை கார்த்திகை தொடக்கம் மாசி மாதம் வரை வருடந்தோறும் பெறுவது குறிப்பிடத்தக்கது. குளிரின் உச்சக்பகுதி பொதுவாக வருடத்தின் இறுதி வாரமாக அமைவதும் குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.