கடந்த 3 தினங்களாக நடைபெற்றிருந்த மாபெரும் யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி, நேற்று நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/01/2014 (திங்கட்கிழமை)
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வடக்கின் மாபெரும் சர்வதேச வர்த்தக கண்காட்சி கடந்த 17 , 18, 19 ஆகிய 3 தினங்களாக யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்தது.
இக்கண்காட்சியானது பாரம்பரிய தொழிற்துறைகள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு, வடமாகாண முதலமைச்சரின் அலுவலகம், கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு, யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றம், யாழ் இந்திய துணை தூதரகம், யாழ் மாநகரசபை, இலங்கைக் கண்காட்சிப் பணியகம், மற்றும் இலங்கை கட்டட அமைப்பாளர் நிறுவனம் ஆகியவற்றின் ஆதரவுடன் நடைபெற்றது.
இதில் 250 ற்கும் மேற்பட்ட விற்பனை மற்றும் காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டிருந்ததுடன், இக்கண்காட்சியில் யாழிலிருந்து 30 உள்ளூர் உற்பத்தி நிறுவனங்களும் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து 180 நிறுவனங்களும் பங்குபற்றியதுடன், அனைத்து துறைகள் தொடர்பான பொருட்களும் காட்சிக்குட்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
karan (srilanka)
Posted Date: January 21, 2014 at 15:04
good photography
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.