VEDA நிர்வாகிகளால் (Valvai Education and Development Association, வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம்) பொறியியலாளர், நிர்வாக உத்தியோகத்தர் பதவி, உள்ளகக் கணக்காளர் பதவி, திட்டமிடுனர் பதவி...போன்ற தினகரன் பிரசுரமான அரச பதிவிகளுக்கான வெற்றிடங்களின் விபரங்களை தொகுத்து வெளியிட்டுள்ளனர்.
விபரங்களில் சம்பந்தப்பட்ட பதவி (வேலை வாய்ப்பு), தேவையான குறைந்தளவு தகமை, சம்பளம், முடிவுத் திகதி போன்றன அடங்குகின்றன.
வெற்றிடங்களின் விபரங்கள் பின்வருமாறு:-
அரச பதவிகளுக்கான பதவி வெற்றிடங்கள் (04.01.2014)
2014.01.13 அன்று வெளி வந்த தினகரன்
மத்திய மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை
01) பொறியியலாளர் (சிவில்) – பதவி 05
கல்வித்தகைமை :-
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் சிவில் பொறியியல் பட்டம் அல்லது இலங்கை பொறியியலாளர் நிறுவனத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அல்லது அதற்கு சமனான தகைமை அல்லது இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பபட்டம் அல்லது இலங்கை பொறியியலாளர் நிறுவனத்தின் (சிவில் பொறியியல்) I மற்றும் II பகுதிகளில் சித்தியடைந்திருத்தல் அல்லது ஐக்கிய இராட்சியத்தின் பொறியியல் நிறுவனத்தின் (சிவில் பொறியியல்) I மற்றும் II பகுதிகளில் சித்தியடைந்திருத்தல். பட்டம் பெற்றதன் பின் அரச கூட்டுத்தாபனம் அல்லது நியதிகள் சட்டச்சபை அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனமொன்றில் 3 வருட அனுபவம்.
அல்லது
மெரட்டுவ பல்கலைக்கழகத்தில் தேசிய தொழல்நுட்ப டிப்ளோமா (சிவில்) அல்லது அதற்கு சமனானதகைமையுடன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றில் 12 வருட அனுபவம்.
அல்லது
மெரட்டுவ பல்கலைக்கழகத்தில் தேசிய தொழல்நுட்ப டிப்ளோமா (சிவில்) அல்லது அதற்கு சமனான தகைமையுடன் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கு நடாத்தப்படும் பரீட்சையில் Iஆம் மற்றும் IIஆம் பகுதிகளில் சித்தியுடன் இலங்கை தொழில்நுட்ப சேவையில் 12 வருட அனுபவம்.
சம்பளம் :- MM – 1-1 2006 ரூ (25,645 - 3X665 – 7 X 735 – 15 X 925 – 46,655)
02)நிர்வாக உத்தியோகத்தர் பதவி
கல்வித்தகைமை :-
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் பெற்றுக்கொள்ளப்பட்ட பட்டத்துடன் பட்டத்தகைமை பெற்றுக்கொண்டதன் பின்னர் அரச திணைக்களம் / கூட்டுத்தாபனம்/ சபை அல்லது அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகமொன்றில் ஒரு வருட அனுபவம்.
சம்பளம் :- JM 1-1 2006A ரூ 20525 – 10 x 365 – 18 x 550 – 34075
03)உள்ளகக் கணக்காளர் பதவி
கல்வித்தகைமை :-
இலங்கை / ஐக்கிய இராட்சியத்தில் பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் அங்கத்துவம் அல்லது ஐக்கிய இராட்சியத்தின் சான்றுபடுத்தப்பட்ட கணக்காளர் நிறுவனத்தின் அங்கத்துவம்.
அல்லது
ஐக்கிய இராட்சியத்தின் பட்டய மொத்த செலவு கணக்காளர் சங்கத்தின் அங்கத்துவம்.
அல்லது
இலங்கை/ ஐக்கிய இராட்சியத்தில் பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் நுழைவுச் சான்றிதழ்/ அதற்குச் சமனான அந்நிறுவனத்தின் வேறு தகைமை அல்லது ஐக்கிய இராட்சியத்தின் பட்டய மொத்த செலவு கணக்காளர் நிறுவனத்தின் அல்லது
ஐக்கிய இராட்சியத்தின் சான்றுபடுத்தப்பட்ட கணக்காளர் நிறுவனத்தின் அல்லது அதற்கு சமனான தகைமை அல்லது இலங்கை தொழிநுட்ப கல்லூரியின் கணக்கியல் தொடர்பான உயர் தேசிய டிப்ளோமா சான்றுதழ் (4வருடம்)/ பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் கணக்கியல்/ நிதி முகாமைத்துவ பாட சித்தியுடன் பெற்றுக் கொண்ட ஆரம்ப பட்டத்துடன் அல்லது அத்தகைமையை பெற்றுக் கொண்டதன் பின்னர் அரச கூட்டுத்தாபனம் நியதிகள் சட்டச்சபை அல்லது தனியார் துறை நிறுவனம் ஒன்றில் கணக்கியல் துறையில் 5 வருட அனுபவம்.
சம்பளம் :- MM -1 -1 2006 ரூ(25640 – 3 x 655 – 7 x 735 – 19 x 925 – 46655)
04)திட்டமிடுனர் பதவி (2)
கல்வித்தகைமை :-
G.C.E (o/l) பரீட்சையில் சிங்களம்/ தமிழ் ஆங்கிலம், கணிதம் உட்பட நான்கு பாடங்களில் திறமைச்சித்தியுடன் ஓரே தடவையில் 6 பாடங்களில் சித்தி. G.C.E (A/l) பரீட்சையில் கணிதபாடம் உட்பட இன்னொரு பாடத்தில் சித்தியுடன் (பொது ஆங்கிலம் தவிர) 3 ஆம் நிலைக்கல்வியினை தொடர்வதற்கான சான்று நிலை பெற்றிருத்தல்.
மற்றும் ஒவ்வொரு பதவிக்குமான கடமைக்குரிய 3ஆம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் விதிக்கப்பட்டுள்ள வகையில் தேசிய தொழற்தகைமை சான்றிதழ்(N.V.Q) 5 நிலைக்கு குறையாத தொழிற்நுட்ப பாடநெறியொன்றினை வெற்றிகரமாக கற்று சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். அல்லது இலங்கை தொழில்நுட்பக் கல்லூரியின் / வேறு அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்பக் கல்லூரியில் 1 வருட திட்டமிடல் பயிலுனர் சான்றிதழ் பெற்றிருத்தல்.
சம்பளம் :- MA -2 -1 2006 ரூ (14610 – 10 x 145 – 7 x 170 – 4 x 240 – 20 x 320 - 24610)
05) தொழில்நுட்ப உதவியாளர்
கல்வித்தகைமை :-
G.C.E (o/l) பரீட்சையில் சிங்களம்/ தமிழ் ஆங்கிலம், கணிதம் உட்பட நான்கு பாடங்களில் திறமைச்சித்தியுடன் ஓரே தடவையில் 6 பாடங்களில் சித்தி. அல்லது அதற்கு சமனான வேறு பரீட்சையில் சித்தி மற்றும் தேசிய தொழில்நுட்ப சான்றுபத்திர பரீட்சையில்(N.C.T) III ஆம் பகுதியில் சித்தியடைந்திருத்தல். அதற்கு சமனான அல்லது உயர்தகைமையுடைய பரீட்சையில் சித்தியடைந்திருத்தல். G.C.E (A/l) பரீட்சையில் கணித பாடம் உட்பட இன்னொரு பாடத்தில் சித்தியுடன் (பொது ஆங்கிலம் தவிர) 3 ஆம் நிலைக்கல்வியினை தொடர்வதற்கான சான்று நிலை பெற்றிருத்தல்.
மற்றும் ஒவ்வொரு பதவிக்குமான கடமைக்குரிய 3ஆம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் விதிக்கப்பட்டுள்ள வகையில் தேசிய தொழற்தகைமை சான்றிதழ்(N.V.Q) 5 நிலைக்கு குறையாத தொழிற்நுட்ப பாடநெறியொன்றினை வெற்றிகரமாக கற்று சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
சம்பளம் :- MA -2 -1 2006 ரூ(14610 – 10 x 145 – 7 x 170 – 4 x 240 – 20 x 320 - 24610)
விண்ணப்ப முடிவுத்திகதி:-2013.01.27
==========================================
2014.01.12 அன்று வெளி வந்த தினகரன்
இலங்கை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை
முகாமைத்துவ உதவியாளர்
கல்வித்தகைமை :-
G.C.E (o/l) பரீட்சையில் சிங்களம்/ தமிழ் ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்கள் உட்பட 5 பாடங்களில் திறமைச்சித்தியுடன் ஓரே தடவையில் 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல். அத்துடன் சமூக / கிராமிய அபிவிருத்தி கணனி கற்கை தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றில் OR பல்கலைக்கழகம் ஒன்றின் மூலம் பெற்றுக்கொண்ட 6 மாத கால சான்றிதழ் கற்கை நெறி ஒன்றினை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். மற்றும் தமிழ், ஆங்கில மொழிகளின் மூலம் பணியாற்றக்கூடிய திறமையினைக் கொண்டிருத்தல் வேண்டும்.
சம்பளம் :- ரூ23638 – 12 x 444 - 8 x 481 – 32814
விண்ணப்பமுடிவுத்திகதி:- 2013.01.27
============================================
2014.01.11 அன்று வெளி வந்த தினகரன்
இலங்கை நிலைபெறுதகு வலுஅதிகார சபை சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சு
01) சிரேஷ்ட தொழிற்சார் (சட்டவாக்கம்) பதவி I
கல்வித்தகைமை :-
1ம் மற்றும் 2ம் சிறப்புத்தேர்ச்சியுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றினால் வழங்கப்பட்ட சட்டத்துறையில் இளநிலைப்பட்டத்துடன் 6 வருடங்கள் உள்ள சட்டத்தரணியாக இருத்தல் வேண்டும்.
சம்பளம் :- MM 1-1 25640 – 665 x 3 – 735 x 7 – 925 x15 – 46655
02) கனிஷ்ட தொழிற்சார் (நிதி) பதவி I
கல்வித்தகைமை :-
1ம் மற்றும் 2ம் சிறப்புத்தேர்ச்சியுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றினால் வழங்கப்பட்ட வர்த்தகம் வியாபார கற்கைகள் / விஞ்ஞர்னம் ஆகிய துறைகளில் இளநிலைப்பட்டத்துடன் மற்றும் (ICASL) இலங்கை பட்டயக்கணக்காளர் நிறுவனத்தின் அசோஷியேட் அங்கத்துவம், வைசேன்ஷியேட், இண்ஆடர்மிடியட் பரீட்சையில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். அல்லது (ICASL) நிறுவனத்தினால் அங்கீகாரம் பெற்ற கணக்காளர் தொழிற்துறையில் உள்ள தொழிற்சார் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட பட்டம்.
சம்பளம் :- MM 1-1 25640 – 665 x 3 – 735 x 7 – 925 x15 – 46655
03) தொழில்நுட்ப உதவியாளர்
கல்வித்தகைமை :-
5 வருட அனுபவங்களுடன் பொறியியல் விஞ்ஞர்னத்தில் தேசிய டிப்ளோமா / தேசிய முகாமைத்துவ நிறுவனத்தின் டிப்ளோமா / மின்சாரவியல் / எந்திரவியல் / தகவல் தொழில்நுட்பவியல் ஆகிய துறைகளில் தேசிய டிப்ளோமா ஆகியவற்றினை பெற்றிருத்தல்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.