அபிவிருத்தி அலுவலர், சிரேஷ்ட முகாமையாளர் (சட்டம்,இடர் முகாமைத்துவம்), முகாமையாளர்-கடன்மீட்பு.......போன்ற அரச பதவிகளுக்கான வெற்றிடங்கள் - 20.01.2014 - VEDA வின் அறிவித்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/01/2014 (வெள்ளிக்கிழமை)
VEDA நிர்வாகிகளால் (Valvai Education and Development Association, வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம்) அபிவிருத்தி அலுவலர், சிரேஷ்ட முகாமையாளர் (சட்டம்,இடர் முகாமைத்துவம்), முகாமையாளர்-கடன்மீட்பு.......போன்றவற்றிகான தினகரன் பிரசுரமான அரச பதிவிகளுக்கான வெற்றிடங்களின் விபரங்களை தொகுத்து வெளியிட்டுள்ளனர்.
விபரங்களில் சம்பந்தப்பட்ட பதவி (வேலை வாய்ப்பு), தேவையான குறைந்தளவு தகமை, சம்பளம், முடிவுத் திகதி போன்றன அடங்குகின்றன.
வெற்றிடங்களின் விபரங்கள் பின்வருமாறு:-
அரச பதவிகளுக்கான பதவி வெற்றிடங்கள் (20.01.2014)
2014.01.20 அன்று வெளி வந்த தினகரன்
தேர்தல்திணைக்களம்
அபிவிருத்திஅலுவலர்
கல்வித் தகைமை :-
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து பெற்றுக் கொண்ட தகவல் தொழிநுட்பப் பட்டம்/ தகவல் தொழிநுட்பத்தை ஒரு பாடமாக கற்றுப் பெற்றுக் கொண்ட பட்டம். (தகவல் தொழிநுட்பத்திற்கு முன்னுரிமை) தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பத்திற்குரியதாக பெற்றுள்ள தொழிற் தகைமை மற்றும் அனுபவம், கணனி தரவு முகாமைத்துவம் தொடர்பான திறமையான விசேட தகைமைகள்.
விண்ணப்பமுடிவுத்திகதி:- 2014.02.10
============================================
2014.01.20 அன்று வெளி வந்த தினகரன்
இலங்கைசேமிப்புவங்கி
01. சிரேஷ்டமுகாமையாளர் - சட்டம்
கல்வித் தகைமை :-
அங்கீகரிக்கப்ட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் MPA/LLM பட்டப்படிப்புடன் ஒரு வங்கியில்/ ஒரு நிறுவனத்தில் 8 வருட பின் தகைமை அனுபவத்தை பெற்றிருக்கும் சட்டத்தரணி. அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்து ஒரு வங்கி/ நிதி நிறுவனத்தில் 10 வருட பின் தகைமையை பெற்றிருக்கும் சட்டத்தரணி, சிங்களம் தமிழ் ஆங்கிலத்தில் பணியாற்றுவதற்குரிய அனுபவத்தினைப் பெற்றிருத்தல். பணியாளர்களை வழி நடத்த கூடிய ஆளுமைத்திறமையும், வல்லமையும் கொண்ட சிறந்த குழு செயற்பாட்டாளராக இருத்தல்.
02. சிரேஷ்ட முகாமையாளர் – இடர் முகாமைத்துவம்
கல்வித் தகைமை :-
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் பட்டப்படிப்பை அல்லது அதற்கு சமனான தொழில் தகைமையை பூர்த்தி செய்து ஒரு வங்கியில்/ நிதிநிறுவனத்தில் 8 வருட பின் தகைமை அனுபவத்தை பெற்றிருக்கும் அதே வேளை அங்கீகரிக்கப்ட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் MPA பட்டப்படிப்பை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் பட்டப்படிப்பை/ அதற்கு சமனான தொழில் தகைமையை பூர்த்தி செய்து ஒரு வங்கியில்/ நிதி நிறுவனம் ஒன்றில் 10 வருட பின் தகைமை. அல்லது இடர் முகாமைத்துவத்தை வெளிப்படுத்தும் ஆற்றலுடன் ஒரு வங்கியில்/ நிதி நிறுவனம் ஒன்றில் 12 வருட கால அனுபவத்துடன் வங்கியில் முகாமைத்துவ டிப்ளோமா சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். இடர் தொழில் வாண்மையாளர்களின் உலக அமைப்பில் GARP/ PRIME அங்கத்துவத்தை பெற்றிருப்பது மேலதிக திறமையாக கொள்ளப்படும்.
03. முகாமையாளர் – கடன்மீட்பு
கல்வித் தகைமை :-
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் பட்டப்படிப்பை அல்லது அதற்குச் சமனான தொழில் தகைமையைப் பூர்த்தி செய்து ஒரு வங்கியில்/ நிதி நிறுவனமொன்றில் கடன் மீட்புத்துறையில் 7 வருடகால பின் தகைமை அனுபவத்தை பெற்றிருக்கும் அதே வேளை சட்ட விடங்களில் நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில் திறமையை வெளிப்படுத்த கூடிய நிறைவேற்று ஆற்றல். அல்லது ஒரு வங்கியில்/ நிதி நிறுவனம் ஒன்றில் கடன் மீட்புத் துறையில் 9 வருட அனுபத்தையும் சட்ட விடயங்களில் நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில் திறமையை வெளிப்படுத்த கூடிய நிறைவேற்று ஆற்றலையும் கொண்டு வங்கி முகாமைத்துவத்தில் டிப்ளோமா சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
04. கிளை முகாமையாளர் (வடக்கு மற்றும் வடமேல் மாகாணம்)
கல்வித் தகைமை :-
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் பட்டப்படிப்புடன்/ அதற்குச சமனான தொழில் தகைமையுடன் ஒரு வங்கியில் 7 வருட கால பின் தகைமை அனுபவத்தை பெற்ற சுய ஊக்கமுள்ள இலக்குகளை அடையக்கூடிய தனிநபர்கள். அல்லது ஒரு வங்கியில் 9 வருட கால அனுபவத்துடன் வங்கி முகாமைத்துவத்தில் டிப்ளோமா சான்றிதழ். ஒரு குழுப்பணியில் விருத்தி அடைந்து முகாமைத்துவம் செய்யக்கூடிய தலைமைத்துவ ஆற்றல்களை நிரூபிக்கும் ஒரு பதிவு.
05. முகாமையாளர் – கடன்மீளாய்வு
கல்வித் தகைமை :-
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் பட்டப்படிப்புடன்/ அதற்கு சமனான தொழில் தகைமையுடன் ஒரு வங்கியில்/ நிதி நிறுவனத்தில் கடன் மீளாய்வுத் துறையில் 7 வருட பின் தகைமை. அல்லது வங்கியில் கடன் மீளாய்வுத்துறையில் 9 வருட அனுபவத்துடன் வங்கி முகாமைத்துவத்தில் டிப்ளோமா சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
05. முகாமையாளர் – கடன்மீளாய்வு
கல்வித் தகைமை :-
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் பட்டப்படிப்புடன்/ அதற்கு சமனான தொழில் தகைமையுடன் ஒரு வங்கியில்/ நிதி நிறுவனத்தில் கடன் சம்பந்தப்பட்ட விடயங்களை கையாள்வதில் 5 வருட கால அனுபவம். அல்லது ஒரு வங்கியில் கடன் சம்பந்தப்பட்ட விடயங்களை கையாள்வதில் 5 வருட கால அனுபவத்துடன் வங்கி முகாமைத்துவத்தில் டிப்ளோமா சான்றிதழ் பெற்றிருத்தலுடன் தமிழ் மொழியில் உரையாடக்கூடிய ஆற்றல்.
06.கடன் அதிகாரி
கல்வித் தகைமை :-
வர்த்தக ரீதியான கடன் வழங்கல்/ குத்தகை சம்மந்தப்பட்ட விடயங்களைக் கையாள்வதில் 4 வருட கால அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.அல்லது ஒரு வங்கி/ நிதி நிறுவனத்தில் கடன் வழங்கல்/ குத்தகை சம்மந்தப்பட்டவிடயங்களில் 6 வருட அனுபவத்துடன் வங்கி முகாமைத்துவத்தில் டிப்ளோமா சான்றிதழ் பெற்றிருத்தலுடன் தமிழ் மொழியில் உரையாடக்கூடிய ஆற்றல். அல்லது க.பொ.த (சா.த) தரத்தில் கணிதம், தமிழ்/சிங்களம், ஆங்கிலம் உட்பட 5 பாடங்களில் திறமைச் சித்தியுடன் க.பொ.த (உ.த) தரத்தில் 3 பாடங்களில் சித்தி பெற்றிருப்பதுடன் ஒரு வங்கியில்/ நிதி நிறுவனத்தில் வர்த்தக/ குத்தகை சம்மந்தப்பட்ட விடயங்களை கையாள்வதில் 7 வருட கால அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
07.மீட்பு அதிகாரி
கல்வித் தகைமை :-
வர்த்தக ரீதியான கடன் மீட்புத்துறையில் 4 வருட கால அனுபவத்தை பெற்றிருப்பதுடன் சட்ட விடயங்களின் போது நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தலில் திறமை வெளிப்படுத்தல். அல்லது வங்கி/ நிதி நிறுவனத்தில் சட்ட விடயங்களின் போது நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில் திறமையை வெளிப்படுத்தும் நிறைவேற்று ஆற்றலில் 6 வருட கால அனுபவத்துடன் வங்கி முகாமைத்துவத்தில் டிப்ளோமா சான்றிதழ் பெற்றிருத்தல். அல்லது க.பொ.த (சா.த) தரத்தில் கணிதம், தமிழ்/சிங்களம், ஆங்கிலம் உட்பட 5 பாடங்களில் திறமைச் சித்தியுடன் க.பொ.த (உ.த) தரத்தில் 3 பாடங்களில் சித்தி பெற்றிருப்பதுடன் ஒரு வங்கியில்/ நிதி நிறுவனத்தில் சட்ட விடயங்களின் போது நிறுவனத்தை பிரிதிநிதித்துவப்படுத்துவதில் திறமையை வெளிப்படுத்தும் நிறைவேற்று ஆற்றலில் 7 வருட கால அனுபவம்.
08. மீட்பு அதிகாரி
கல்வித் தகைமை :-
அங்கீகரிக்கப்ட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் குறைந்த பட்சம் 2ம் வகுப்பு மேல்நிலை பட்டப்படிப்பை/ அதற்குச் சமனான தொழிற் தகைமையை பெற்றிருத்தல் வேண்டும். விண்ணப்பதாரி கணனி அறிவுடன் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சரளமாக பேசக்கூடிய திறமை.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.