VEDA நிர்வாகிகளால் (Valvai Education and Development Association, வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம்) பொது முகாமையாளர், இயந்திர அதிகாரி, நில அளவைக் கள உதவியாளர் ....போன்றவற்றிகான தினக்குரல், வீரகேசரி மற்றும் வர்த்தமானி பிரசுரமான அரச பதிவிகளுக்கான வெற்றிடங்களின் விபரங்களை தொகுத்து வெளியிட்டுள்ளனர்.
விபரங்களில் சம்பந்தப்பட்ட பதவி (வேலை வாய்ப்பு), தேவையான குறைந்தளவு தகமை, சம்பளம், முடிவுத் திகதி போன்றன அடங்குகின்றன.
வெற்றிடங்களின் விபரங்கள் பின்வருமாறு:-
அரச பதவிகளுக்கான பதவி வெற்றிடங்கள் (27.01.2014)
2014.01.25 அன்று வெளி வந்த தினக்குரல்
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தில் அட்டவணைப்படுத்தப்படாத பதவிகளின் வெற்றிடங்களை நிரப்புதல்.
01. காவலாளி
கல்வித் தகைமை :-
கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் 2 அமர்வுகளிற்கு மேற்படாத அமர்வுகளில் தமிழ்/ சிங்களம் உள்ளடங்கலாக 6 பாடங்களில் சித்தி அடைந்திருக்க வேண்டும்.
02. வேலை/ வெளிக்கள தொழிலாளர்
கல்வித்தகைமை :-
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையில் 2 அமர்வுகளிற்கு மேற்படாத அமர்வுகளில் தமிழ்/ சிங்களம் உள்ளடங்கலாக 6 பாடங்களில் சித்தி அடைந்திருக்க வேண்டும்.
சம்பளம் :- PL -1- 2006A 11730 –10 x 120 – 10 x 130 – 10 x 145 – 12 x 160 - 17600
03. சாரதி
கல்வித்தகைமை :-
கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் 2 அமர்வுகளிற்கு மேற்படாத அமர்வுகளில் தமிழ்/ சிங்களம் உள்ளடங்கலாக 6 பாடங்களில் சித்தி அடைந்திருக்க வேண்டும்.
சம்பளம் :- PL -3- 2006A ரூ 12470 – 10 x 130 – 10 x 145 – 10 x 160 – 12 x 170 – 18860
விண்ணப்பமுடிவுத்திகதி: - 2014.02.07
=====================================
2014.01.26 அன்று வெளி வந்த வீரகேசரி
நோத்சீ லிமிடெட் (NORTHSEA LED) பாரம்பரிய கைத்தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் கம்பனி.
01. பொது முகாமையாளர்
கல்வித் தகைமை:-
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கபட்ட ஒரு பல்கலைக்கழகம் வழங்கிய இளமானிப்பட்டம். அத்துடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டதும் அங்கீகாரம் கொண்டதுமான கல்வி நிறுவனம் ஒன்றிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட முகாமைத்துவ பட்டப்படிப்பு தகைமை.
அல்லது
முகாமைத்துவத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழில் புலமை ஒன்றின் கம்பனி உறுப்புரிமை. அத்துடன் பட்டப் படிப்புத் தகைமையுடன் கூட்டுத்தாபனம்/ சபை/ நிறுவனம் ஒன்றில் குறைந்தது 10 வருட முகாமைத்துவ அனுபவம். இதில் 3வருடம் சீரேஷ்ட முகாமையாளர் அனுபவம்.
அல்லது
பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கபட்ட ஒரு பல்கலைக்கழகம் வழங்கிய அரசாங்க நிருவாகம்/ நிதி/ வணிக நிருவாகம்/ முகாமைத்துவம்/ சட்டத்தில் இளமானிப்பட்டம். அத்துடன் முகாமைத்துவத்தில் 18 வருட அனுபவம் இதில் 5 வருட சிரேஷ்ட முகாமையாளர் அனுபவம்.
சம்பளம் :- ரூ 41745 – 15 x 1100 – 58245
விண்ணப்ப முடிவுத்திகதி: – 2014.02.07
:==================================
2014.01.24 அன்று வெளி வந்த வர்த்தமானி
அரச தொழிற்சாலைத் திணைக்களம்
01. இயந்திர அதிகாரி
கல்வித் தகைமை:-
தூய கணிதம்/ பிரயோக கணிதம், இணைந்த கணிதம் மற்றும் பௌதீகவியல் உட்பட்டதாக 3 விஞ்ஞான பாடத்தில் உயர்தரப் பரீட்சையில் ஒரே தடவையில் சித்தி அடைந்திருக் வேண்டும். மற்றும் மொழி அல்லது இலக்கியம், கணிதம், விஞ்ஞானம் மற்றும் மேலும் ஒரு பாடத்திற்கு திறமைச் சித்தியுடன் 6 பாடங்களில் சாதாரண தர பரீட்சையில் 2 அமர்வுகளுக்கு மேற்படாதவாறு சித்தி அடைந்திருத்தல் வேண்டும்.
சம்பளம்:- ரூ6 / 2006 (4) MN 3 – 2006 A 15005 – 180 x4 240 x 6 – 320 x 11 – 360 x 20 – 27885
விண்ணப்ப முடிவுத்திகதி :– 2014.02.13
=========================================
2014.01.24 அன்று வெளி வந்த வர்த்தமானி
காணி, காணி அபிவிருத்தி அமைச்சு நில அளவைத் திணைக்களம்
01. நில அளவைக் கள உதவியாளர்
கல்வித் தகைமை:-
2 திறமைச் சித்தியுடன் 2 அமர்வுகளுக்கு மேற்படாதவாறு G.C.E(O/L) பரீட்சையில் சித்தி அடைந்திருத்தல் வேண்டும். நில அளவைக் கள உதவியாளர்களுக்குரிக்குரிய 3ம் நிலை மற்றும் தொழிற் கல்வி ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளவாறு தேசிய தொழிற் தகைமை 2ம் மட்டத்தை தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
சம்பளம்: ரூ12210 - 10 x 130 – 10 x 145 – 10 x 160 – 12 x 170 - 18600
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.