எதிர்வரும் சித்திரை புதுவருடத்திலிருந்து யாழிற்கு புகையிரதச் சேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 30/01/2014 (வியாழக்கிழமை)
எதிர்வரும் சித்திரை மாத தமிழ், மற்றும் சிங்கள புதுவருடத்திலிருந்து யாழ்ப்பாணம் வரை புகையிரதச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த 20 வருடங்களிற்கு மேலாக உள்நாட்டுப் போர் காரணமாக தடைப்பட்டிருந்த வடக்கிற்கான புகையிரதச்சேவையானது, 20 வருடங்களின் பின்னர், கடந்த புரட்டாதி மாதம் 14 ஆம் திகதி வவுனியாவின் ஓமந்தையில் இருந்து கிளிநொச்சிவரை
மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
கிளிநொச்சியில் இருந்து 30 கிலோ மீற்றர் தூரத்தை கொண்ட பளை வரையான புகையிரதப் பாதையை நிர்மாணிக்கும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுவருவதுடன், இடையில் இருக்கும் பரந்தன் மற்றும் ஆணையிறவு ரயில் நிலையங்கள் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டு விட்டதாகவும், மேலும் தற்பொழுது பளையில் இருந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் வரையான பகுதிகளில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி புகையிரத நிலையம் - Kilinochchi Railway station
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.