அழகானதாகவும், பாதுகாப்பானதுமாகவும் உதயமாகும் ரேவடிக் கடற்கரை (கடற்கரை மைதானத்தின் முழுப் படத்தொகுப்பு இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 05/03/2014 (புதன்கிழமை)
வல்வெட்டித்துறைச் சந்தியை அண்மித்து அமைந்துள்ள ரேவடி கடற்கரையில் கடந்த சில நாட்களாக ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் சிரமதான மற்றும் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 1996 இலிருந்து கடந்த ஆண்டு வரை இராணுவ முகாம் பகுதியாக அமைந்திருந்த இப்பகுதியில் 2011 ஆம் ஆண்டு இராணுவத்தினரின் அனுமதியுடன் ஆரம்ப சிரமதானங்களைதமேற்கொண்டு, கழக விளையாட்டுப் போட்டி நடாத்தப்படிருந்தது.
தற்பொழுது இராணுவத்தினர் முற்றாக இப்பிரதேசத்திலிருந்து வெளியேறிய நிலையில், கடற்கரையைப் பாவித்துவருகின்ற பொதுமக்களின் பாதுகாப்பிற்கும், கடற்கரையை மண் அரிப்பில் இருந்து தடுக்கும் நோக்குடனும் ஒர் அணை, ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் மற்றும் அப்பிரதேச பொது மக்களினால் அமைக்கப்பட்டுவருகின்றது.
சுமார் 230 அடி நீளமான இந்த அணை, நிலமட்டத்திற்கு கீழ் சுமார் 3 அடி ஆழமும் நிலமட்டத்திற்கு மேல் சுமார் 4 அடி உயரமும் என அமையபெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது . இதனால் கடல் நீர் நேரடியாக வருவது தடுக்கப்படுவதுடன், மண்மீது நேரடியாகக் கடலில் இருந்து வீசும் காற்றின் வேகமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த கடற்கரையில் அண்மையில், மைதானம் அற்ற ரேவடிப் பிரதேசத்தில் அமைந்துள்ள, ரோமன் கத்தோலிக்க பாடசாலையின் விளையாட்டுப் போட்டியும் நடாத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடற்கரை மைதானத்தின் தற்போதைய ஒவ்வொரு பக்கத் தோற்றம்
கட்டப்பட்டுவரும் புதிய அணை
கடற்கரை மைதானமும் சுங்க நிலமும், வல்வை நகரப் பகுதியில் அமைந்துள்ள பெரிய பரந்த நிலம்
ரேவடி கழக உறுப்பினர்கள், வேதனம் அற்ற வேலையில்
கட்டப்பட்டுவரும் அணைக்கட்டு
கரப்பந்து மைதானம்
இலங்கைச் சுங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பகுதியின் எல்லைகள்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.