எதிர்வரும் ஏப்ரல் 23,24,25 இல் வடபகுதி கல்வி மாற்றங்களை ஆராய உயர்மட்ட மாநாடு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/03/2014 (வெள்ளிக்கிழமை)
30 வருட யுத்தத்தின் பின்னர் வட பகுதியில் ஏற்பட்டுள்ள கல்வி நடவடிக்கைகளின் பாரிய மாற்றங்கள் தொடர்பாக கல்வி மாநாடொன்றை யாழ் நகரில் நடாத்த கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன திட்டமிட்டுள்ளார். எதிர்வரும் ஏப்ரல் 23, 24, 25 ஆம் திகதிகளில் இந்த மாநாட்டை நடத்துவது என நேற்று கல்வி அமைச்சில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரச பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்தி குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
முதல் தடவையாக வட மாகாண கல்வி அமைச்சர் ரி. குருகுலராஜா மற்றும் வட மாகாண பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உட்பட கல்விமான்கள் கலந்துகொண்ட கூட்டமொன்று நேற்று கல்வி அமைச்சில் அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்றது.
இதன்போதே இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போதுள்ள கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும், எதிர் காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக் கைகள் குறித்தும், ஏற்பட்டுள்ள சிக்கல்கள், பிரச்சினைகள் என்பவை பற்றியும் இந்த மாநாட்டில் ஆராயப் படவுள்ளன.
இந்த மாநாட்டில் உயர் கல்வி அமைச்சு, விளையாட்டுத் துறை அமைச்சு, தொழிற் பயிற்சி அமைச்சு போன்றவற்றையும் இணைத்துக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று கல்வி அமைச்சில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ். சத்தியசீலன், வட மாகாண கல்விப் பணிப்பாளர் வீ. செல்வராஜா, யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் கே. சர்வேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர் - இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.