பளைக்கு இன்று முதல் விசேட ரயில், 6 மணித்தியாலங்களில் வந்தடையும்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/03/2014 (வெள்ளிக்கிழமை)
இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து யாழ் மாவட்டத்தின் பளைக்கு இன்று முதல் விசேட புகையிரத சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிரத சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பில் அமைந்துள்ள கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பிற்பகல் 0230 மணிக்கு புகையிரதம் புறப்படும் எனவும், பயண நேரம் 6 மணித்தியாலங்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குளிரூட்டப்பட்ட இந்த புகையிரத சேவையின் கட்டணம் 1400/- ரூபாவாகும். குறித்த புகையிரதம் நேரான பாதைகளில் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வளைவுகளில் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்திலும் பயணிக்கக் கூடியது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.