யாழ் மாகாணத்தில் பாரம்பரிய பொழுதுபோக்கு நடவடிக்கைகளை முன்னேற்றும் முகமாக கொழும்பு பட்ட கழகத்துடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் என்றுமில்லாதவாறு பட்டம் ஏற்றும் போட்டியொன்றை நடாத்துவதற்கான கலந்துரையாடல் ஒன்று வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் ஜிஏ சந்திரசிறி, ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் மற்றும் இப்போட்டியின் பங்குதாரர்கள் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர் .
பட்டங்கள் கட்டுதல் மற்றும் பறக்கவிடுதலிலுள்ள தொழில்நுட்பங்கள் தொடர்பான பயிற்சிப்பட்டறை ஒன்று நடாத்தப்படவுள்ளது. இப்போட்டியில் 1000 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கான விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படவுள்ளன. இப்போட்டியானது ஏப்ரல் மாதத்தில் வருடப்பிறப்பன்று நிகழ்த்துவுதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்தினத்தன்று வெப்பக்காற்று பலூன்களும் பறக்கவிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ் விண்ணப்பங்கள் தொடர்பான விபரங்கள் பின்னர் எமது இணையதளத்தில் இணைக்கப்படும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.