VEDA நிர்வாகிகளால் (Valvai Education and Development Association, வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம்) தொழில்நுட்ப உதவியாளர், அளவைப்பரிசோதகர், சிரேஸ்ட சிவில் எந்திரி, எந்திரிமார்கள், உதவியாளர்கள்.......போன்றவற்றிகான , தினகரன், தினமுரசு ஆகியவற்றில் பிரசுரமான அரச பதிவிகளுக்கான வெற்றிடங்களின் விபரங்களை தொகுத்து வெளியிட்டுள்ளனர்.
விபரங்களில் சம்பந்தப்பட்ட பதவி (வேலை வாய்ப்பு), தேவையான குறைந்தளவு தகமை, சம்பளம், முடிவுத் திகதி போன்றன அடங்குகின்றன.
வெற்றிடங்களின் விபரங்கள் பின்வருமாறு:-
அரச பதவிகளுக்கான பதவி வெற்றிடங்கள் (02.03.2014)
2014.02.23 அன்று வெளி வந்த தினகரன்
கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு மத்திய கலாசார நிதியம்
01.தொழில்நுட்ப உதவியாளர்
கல்வித்தகைமை:-
அ) க.பொ.த (சா/த) பரீட்சையில் தமிழ்/ சிங்களம், கணிதம் ஆகிய பாடங்களிலும் திறமைச் சித்தியுடன் ஒரே அமர்வில் குறைந்தது 6 பாடங்களில் சித்தி அடைந்திருத்தல் வேண்டும்.
ஆ) க.பொ.த (உ/த) பரீட்சையில் விஞ்ஞான விடயத்துறையில் அனைத்து விடயங்களிலும் சித்தியடைந்து மூன்றாம் நிலைய கல்விப் பாட நெறியை கற்பதற்கு தேவையான சாதாரண மட்டம் பெற்றிருத்தல்.
இ) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பெற்றுக்கொள்ளப்பட்ட தேசிய தொழில்நுட்ப டிப்ளோமா(சிவில்) சான்றிதழ் (NVQ மற்றும் (5) மட்டத்திற்கு குறையாத) பெற்றிருத்தல்.
அல்லது
இலங்கை தொழில்நுட்பக் கல்லூரியின் மூலம் தேசிய தொழில்நுட்ப (NVQ 5 மட்டம் சான்றிதழ் (சிவில்/மின்சாரம்) உடன் உரித்துடைய துறையில் 4 வருடத்திற்கு குறையாத) பின்படிப்பு அனுபவம் பெற்றிருத்தல்.
அ) க.பொ.த (சா/த) பரீட்சையில் தமிழ்/ சிங்களம், கணிதம் ஆகிய பாடங்களிலும் திறமைச் சித்தியுடன் ஒரே அமர்வில் குறைந்தது 6 பாடங்களில் சித்தி அடைந்திருத்தல் வேண்டும்.
ஆ) க.பொ.த (உ/த) பரீட்சையில் விஞ்ஞான விடயத்துறையில் அனைத்து விடயங்களிலும் சித்தியடைந்து மூன்றாம் நிலைய கல்விப் பாட நெறியை கற்பதற்கு தேவையான சாதாரண மட்டம் பெற்றிருத்தல்.
இ) இலங்கை தொழில்நுட்பக் கல்லூரியின் தேசிய தொழிலநுட்ப(NVQ மற்றும் (5) மட்டத்திற்கு குறையாத) சான்றிதழ் (அளவைப் பரிசோதகர்) உடன் உரித்துடைய துறையில் 4 வருடத்திற்கு குறையாத பின்படிப்பு அனுபவம் பெற்றிருத்தல்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.