வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம் (VEDA), பல்வேறு பத்திரிகைகள் மற்றும் வர்த்தமானிகளில் வெளியாகியுள்ள அரச பதவிகளுக்கான வெற்றிடங்களின் வேலைகளிற்கான தொகுப்பை வெளியிட்டுள்ளனர்.
விபரங்களில் சம்பந்தப்பட்ட பதவி (வேலை வாய்ப்பு), தேவையான குறைந்தளவு தகமை, சம்பளம், முடிவுத் திகதி போன்றன அடங்குகின்றன.
அ) இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின்/ ஐக்கிய இராச்சியத்தின் பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் அங்கத்துவம் அல்லது ஐக்கிய இராச்சியத்தின் செலவீடு அல்லது முகாமைத்துவ கணக்காளர் நிறுவனத்தில் அங்கத்துவம் அத்துடன் கணக்காளராக 12 வருட அனுபவம் அதில் 6 வருட சிரேஷ்ட கணக்காளராக அனுபவம் இருத்தல் வேண்டும்.
ஆ) இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் உட்புகுதல் சான்றிதழ் அல்லது அதற்குச் சமமான ஐக்கிய இராச்சியத்தின் செலவீடு அல்லது முகாமைத்துவ கணக்காளர் பரீட்சையில் சித்தி. அல்லது இலங்கை தொழிநுட்பக் கல்லூரியின் கணக்கியல் டிப்ளோமா சான்றிதழ் (4வருடம்) அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் கணக்கியல்/ நிதிமுகாமைத்துவம் முக்கிய பாடமாகக் கொண்ட பட்டப்படிப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகுதி பெற்ற பின்னர் கணக்காளராக அரச/ தனியார் நிறுவனம் ஒன்றில் 18வருட அனுபவம் அதில் 6 வருடங்கள் சிரேஷ்ட கணக்காளராக அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இ) இலங்கையில் கணக்காளர் சேவையின்/ இலங்கை பட்டயக் கணக்காளர் சேவையில் 1ம் தரத்தில் 5 வருட சேவை அனுபவமுள்ள அங்கத்தவராக இருத்தல் வேண்டும்..
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் ( ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகத்தினால் நிதியிடப்பட்டது மத்திய மற்றும் சப்பர கமுவ ஆகிய இடங்களில் மாகாண வீதி அபிவிருத்திச் செயற்திட்டம்.
* செயற்திட்ட பணிப்பாளர் குழாமிற்கு ஆட்சேர்த்தல்
கல்வித்தகைமை:-
வெளிநாட்டு நிதியிடப்பட்ட செயற்திட்டங்களின் அனுபவத்துடன் இலங்கை பொறியியல் சேவை (சிவில் பொறியியலாளர்) 2ம் வகுப்பை சார்ந்த அலுவலர். அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகமொன்றில் சிவில் பொறியியலில் பெறப்பட்ட 4 வருட பட்டப்படிப்புடன் வெளிநாட்டு நிதியிடப்பட்ட செயல்திட்டங்களில் 8 வருட அனுபவம். அல்லது இலங்கை பொறியியலாளர் நிறுவனத்தினால் நாடாத்தப்பட்ட பொறியியல் பேரவை பரீட்சைகளில் அனைத்துப் பாகங்களையும் பூர்த்தி செய்திருப்பதுடன் வெளிநாட்டு நிதியிடப்பட்ட செயற்றிட்டங்களில் 8 வருட அனுபவத்துடன் பொறியியல்துறையில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்சார் பொறியியல் நிறுவனத்தின் பட்டய அங்கத்துவம்/ பட்டத்திற்கு பிந்திய தகைமைகள்
கல்விப் பொதுத் தராதர(சா/த) பரீட்சையில் மொழி/ இலக்கியம், கணிதம், விஞ்ஞானம் உட்பட இரு அமர்வுகளுக்கு மேற்படாதவாறு 6 பாடங்களில் சித்தி அடைந்திருக்க வேண்டும். தொழில் மற்றும் தொழில் கல்வி நிறுவனமொன்றில் சிவில்பொறியியல்துறை அமைவாக தேசிய தொழிற்தகைமை(NVQ) 5 மட்டத்துக்கு குறைவான பாடநெறியை பூர்த்தி செய்திருத்தல்.
சம்பளம்:- ரூபா 14425 – 10 x 145 – 11 x 170 – 6 x 240 – 14 x 320 – 23665
பூநகரி பிரதேச சபையின் அட்டவணைப்படுத்தப்படாத பதவிகளின் வெற்றிடங்களை நிரப்புதல்.
* சந்தை மேற்பார்வையாளர்
சம்பளம்:- MN 1 – 1 2006 A (13120 x 18 x 145 - 15730)
* மின்னினைப்பாளர்
சம்பளம்:- 12210 – 18 x 130 – 14550
* சாரதி
சம்பளம்:-12470 – 18 x 130 – 14810
* ஆயுள் வேத மருந்தாளர் பதவி
சம்பளம்:-11730 – 18 x 120 - 13890
* நூலக பரிசாரகர்
சம்பளம்:-11730 – 18 x 120 - 13890
* வேலை/ வெளிக்கள தொழிலாளி
சம்பளம்:-11730 – 18 x 120 - 13890
தகைமை:- அனைத்துப் பதவிகளுக்கும் கல்விப் பொதுத் தராதர(சா/த) பரீட்சையில் இரு அமர்வுகளுக்கு மேற்படாதவாறு சிங்களம்/ தமிழ் உட்பட 6 பாடங்களில் சித்தி அடைந்திருக்க வேண்டும்.
அரச வளங்கள் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு
v உதவிக் கைத்தொழிலாளர்(இயந்திர மின்சார/ சிவில்/ உற்பத்தி) முகாமைத்துவ உதவித் தொழில்நுட்ப சேவைத்தரம் Ma-1-2 (III ஆம் தரம்)
கல்வித்தகைமை:- கல்விப் பொதுத் தராதர(சா/த) பரீட்சையில் சிங்களம்/தமிழ், ஆங்கிலம், கணிதம் உட்பட 4 பாடங்களில் திறமைச் சித்தியுடன் 2 அமர்வுகளுக்கு மேற்படாதவாறு 6 பாடங்களில் சித்தி அடைந்திருக்க வேண்டும்.
கல்விப் பொதுத் தராதர(உ/த) பரீட்சையில் (கணித பாடப்பிரிவின்) அனைத்துப் பாடங்களிலும் (சாதாரண பொதுப் பரீட்சை தவிர்ந்து) சித்தியெய்தி 3 ஆம் நிலைக் கல்விப்பாட நெறியொன்றினை கற்று தேவையான தரமட்டத்தினை அடைந்திருத்தல்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.