வைத்திலிங்கம்பிள்ளை புலவருக்கு வல்வையில் சிலை வைக்க முயற்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 22/03/2014 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறையின் முதல் அடையாளமாக விளங்கும் இயற்றமிழ் போதகாசிரியர் ச.வையித்தியலிங்கப்பிள்ளை புலவருக்கு வல்வையில் சிலை வைக்க முயற்சி எடுக்கப்ட்டுள்ளது. வல்வெட்டித்துறை.ஒ.ஆர்.யி இனால் ஒழுங்கமைகப்படவுள்ள இச் சிலை அமைக்கும் முயற்சி, வல்வையில் தற்பொழுது வசித்துவரும் வைத்திலிங்கம்பிள்ளை புலவரின் சந்ததியினரால், அவர்களின் உறவினர்களின் மற்றும் நலன்விரும்பிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ளது.
வல்வெட்டித்துறையில் பிறந்த சங்கரநாதர் வைத்திலிங்கம்பிள்ளை உடுப்பிட்டி சிவசம்பு புலவரின் மாணாக்கர். பாரதி நிலைய முத்திராட்சகசாலை (அச்சகம்) நிறுவியதோடு, ஒரு தமிழ் பாடசாலையையும் நடத்தினார். 1878இல் "நிம்பியாகப் பொருள்" என்ற இலக்கண நூலுக்கு விளக்கம் எழுதினார். "சூரபத்மன்" என்ற நூலுக்கு உரை எழுதினார். "சைவ அபிமானி" என்ற பத்திரிகையை பாரதி நிலையத்தினூடாக மாதமொருமுறை இவர் வெளியிட்டார்.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் 8 ஆம் திகதி வையித்தியலிங்கபிள்ளையின் சிந்தாமணி நிகண்டு - 2 ஆம் பதிப்பு 137 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் பிரசுரமாகியிருந்ததும், எதிர்வரும் 4 ஆம் திகதி திருகோணமலையில் இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் சிந்தாமணி நிகண்டு வெளியிடப்படவுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மதுரை தமிழ் சங்க பேராகரதியில் வரைவிலக்கணத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த ஒரு சிலரில் வையித்தியலிங்கபிள்ளை புலவர் ஒருவர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
Capt.S.மணிவண்ணன் எமக்கு எழுதி அனுப்பியுள்ள வையித்தியலிங்கபிள்ளை பற்றிய கட்டுரை இன்னும் சில தினங்களில் எமது இணையத்தில் வெளியாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.