வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப் பகுதியில், ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால் அமைக்கப்பெற்றுவரும் சிறுவர் பூங்கா வேலைகள் இன்று பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே சிறுவர் பொழுதுபோக்கிற்கான சில விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் ஏனைய உபகரணங்கள் பெரும்பாலும் இன்று பொருத்தப்பட்டுவிடும் என ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகத்தினர் தெரிவிக்கின்றனர்.
இது இவ்விதமிருக்க, குறித்த பூங்காவைச் சுற்றியுள்ள பகுதிகளை துப்பரவாக்கி சீரமைக்கும் பணியிலும் ரேவடி கழகத்தினர் கடந்த சில நாட்களாக ஈடுபட்டுள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.