வல்வை Indoor Futsal ground 2 ஆவது வருட நிறைவு நிகழ்வுகள் நேற்று நடைபெற்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 16/04/2014 (புதன்கிழமை)
வல்வெட்டித்துறை அளக்கடவை ஒழுங்கையில் அமைந்துள்ள உள்ளக விளையாட்டரங்கத்தின் (Indoor Futsal ground) 2 ஆவது வருட நிறைவுயொட்டி சிறப்பு நிகழ்வுகள் நேற்று மாலை நடைபெற்றன.
சுமார் 6 மணியளவில் 10 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களின் உதைபந்தாட்டப் போட்டியுடன் நிகழ்வுகள் ஆரம்பித்திருந்தன. இதனைத் தொடர்ந்து "WORDS WORDS WORDS" என்னும் என்ற ஆங்கிலப்புத்தகத்தின் வெளியீடு இடம்பெற்றிருந்தது.
தொடர்ந்து வல்வை வீரகளிற்க்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி இடம்பெற்றது.
புளூஸ் உதவி நிதியம்
நேற்றைய நிகழ்வுகளில் முக்கிய நிகழ்வாக புளூஸ் உதவி நிதியம் - சிறந்த எதிர்காலத்தை உருவாக்க (BLUES FOUNDATION -FOR BETTER FUTURE ) என்ற அமைப்பு பற்றிய அறிமுகம் இடம்பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து வதிரி டைமண்ட்ஸ் - கரணவாய் கொலின்ஸ் மற்றும் வல்வை - வதிரி - டைமண்ட்ஸ் விளையாட்டுக் கழகங்களிற்கிடையிலான காட்சி உதைபந்துப் போட்டிகள் இடம்பெற்றிருந்தன
எட்வேட் தங்கவடிவேல், அரு சபாரெத்தினம் ஆகியோரின் ஞாபகார்த்தம் உருவாக்கப்பட்ட குறித்த இந்த விளையாட்டரங்கம் உதைப்பந்து , கரப்பந்து, பூப்பந்து என பல விளையாட்டுக்களை ஒரே இடத்தில் கொண்டுள்ளதுடன், இலங்கையில் இம்மாதிரியாக அமையப்பெற்ற முதாலவது விளையாட்டரங்கம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.