வல்வெட்டித்துறை நகர நிர்வாகத்தின் கீழ் முறைகேடுகள், ஊழல்கள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்துள்ள நகரசபை உறுப்பினர்கள் 5 பேர், அது தொடர்பில் ஆராய்வதற்காக முன்னறிவித்தல் கொடுத்து அவசர கூட்டத்தைக் கூட்டுமாறு நகர சபைத் தலைவர் ந.ஆனந்தராஜிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அது தொடர்பான பிரதிகள் வடக்கு மாகாண முதலமைச்சர், ஆளுநர், பிரதம செயலாளர் உட்பட 6 பேருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நகரசபை உறுப்பினர்கள் இது தொடர்பாகக் கூறும் போது, ""வல்வெட்டித்துறை நகர சபையால் வழங்கப்பட்ட அட்டவணைப்படுத்தப்படாத ஊழியர்கள் தெரிவில் இலஞ்சம் பெற்றப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அது தொடர்பில் வடமாகாண உள்ளூராட்சி அமைச்சும், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரும் விசாரணைக் குழு ஒன்றை அமைத்து விசாரணைகள் நடத்தி அதில் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும். தலைவர் மீது எமக்கு நம்பிக்கை இல்லை'' என்று தெரிவித்துள்ளனர். க.சதீஸ், க.ஜெனராஜா, சூ.சேவியர் குலநாயகம், கோ.கருணானந்தராஜா மற்றும் ச.பிரதீபன் ஆகிய நகரசபை உறுப்பினர்களே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.