வடபகுதிக்கான அதிசொகுசு ரயில் வண்டியுடன் மற்றொரு ரயில் குருநாகல் பொத்துஹெரவில் விபத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 30/04/2014 (புதன்கிழமை)
இலங்கையின் வடபகுதியின் பளைவரையான சேவையில் ஈடுபடும் அதிசொகுசு ரயில் வண்டியுடன் (Intercity Express) மற்றொரு ரயில் வண்டி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 70 பேர் வரையானோர் காயம் அடைந்துள்ளனர் இங்குள்ள செய்தி ஸ்தாபனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்து குருநாகலின் பொத்துஹெர (Pothuhera) புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இன்று காலை சுமார் 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், வவுனியாவில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில் (Rajina), கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பளை நோக்கி பயணித்த கடுகதி சொகுசு ரயிலுடன் (Intercity Express) நேருக்கு நேர் மோதியதிலேயே (Head on collision) இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.