சென்னை மத்திய புகையிரத நிலையத்தில் குண்டுகள் வெடிப்பு, ஒருவர் பலி
பிரசுரிக்கபட்ட திகதி: 01/05/2014 (வியாழக்கிழமை)
சென்னை மத்திய புகையிரத நிலையத்தில் (சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்) பெங்களூருவில் இருந்து கவுகாத்தி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலையில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெறுள்ளது. இதில் ஆந்திர மாநிலம் குண்டூரைச்சுவாதி என்ற பெண்பலியானதுடன்,10 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுடன் என தமிழக செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெங்களூருவில் இருந்து கவுகாத்தி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை சென்ட்ரல் வழியாக செல்கிறது. அந்த ரயில் இன்று (01.05.2014) வியாழக்கிழமை காலை 7 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள 9 ஆம் எண் பிளாட் பாரத்தில் வந்தடைந்த பின்னர், 7.15 மணிக்கு அந்த ரயிலின் படுக்கை வசதி கொண்ட எஸ்.4 மற்றும் எஸ்.5 ஆகிய பெட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.