அன்னபூரணி எனும் கப்பல் வல்வெட்டித்துறையில் செய்யப்பட்டு 1936 ஆம் வருடம் வல்வெட்டித்துறையிலிருந்து புறப்பட்டு, பின்னர் கொழும்பு துறைமுகத்திலிருந்து அமெரிக் காவின் Gloucester துறைமுகத்தை சென்றடைந்த 75 ஆவது வருடத்தைச் (1st August 1938) சிறப்பிக்கும் முகமாக Valvettithurai.org ஆல், அ. சி. விஷ்ணுசுந்தரம் நினைவு மையத்தின் (Canada) அனுசரணையுடன் ஓவியப்போட்டி ஒன்று நடாத்தப்படவுள்ளது.
இவ் ஓவியப் போட்டிக்கு முதலாம் பரிசாக 50,000/- ரூபாவும், இரண்டாம் பரிசாக 30,000/- ரூபாவும், மூன்றாம் பரிசாக 20,000/- ரூபாவும் ''அ. சி. விஷ்ணுசுந்தரம் நினைவு மையத்தினர்'' வழங்கவுள்ளனர்.
[அன்னபூரணி (Florence C Robinson) - Baltimore-sunஎனும் அமெரிக்கப் பத்திரிகையில் வெளியாகியிருந்த இந்தப் புகைப் படத்தை, அப்பத்திரிக்கை நிறுவனத்திடமிருந்து பெற்று எமக்கு கனடாவில் இருந்து அனுப்பியிருப்பவர் திரு.வி.அருள் சுந்தரம்]
அத்துடன் இவ் ஓவியப்போட்டியில் பங்கு கொள்ளும் அனைத்து ஓவியங்களும் ஆவணப்படுத்தப்படவுள்ளன.
இவ் ஓவியப் போட்டியின் நோக்கம் அன்னபூரணி, மற்றும் அதனுடன் தொடர்புடைய வியக்கத்தக்க விடயங்களை மேலும் வெளிக்கொணர்வதும், இயன்றவரை இதனை மேலும் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துவதாகும்.
போட்டி சம்பந்தப்பட்ட அறிவுறுத்தல்கள்.
•போட்டியில் எவரும், எங்கிருந்தும் பங்கு பெற்றலாம்.
•தெரிவு வெளிப்படையாக, மூன்றாம் நபர்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.
•ஓவியப்போட்டியின் பிரதான கருப்பொருள் அன்னபூரணிக் கப்பலாக இருக்க வேண்டும். இதுவே போதுமானது.
•ஆனாலும் வரையப்படும் ஓவியத்தில் (அதே ஓவிய பக்கத்தில்) அன்னபூரணியுடன் தொடர்புடைய பின்வருவனவற்றில் ஏதாவது ஒன்றைச் சேர்த்துக் கொள்வது சிறப்பாகக் கருதப்படும். அன்னபூரணி பற்றிய செய்திகளைப் படித்து உங்கள் கற்பனையில் வரும் சாத்தியமான ஒன்றை தெரிவு செய்து வரையலாம். அவையாவன,
கப்பல் கட்டப்பட்ட இடம்
கப்பல் கட்டப்படுதல்
கப்பலைச் செலுத்திய சிப்பந்திகள் (தண்டையல்கள்)
கப்பலின் உரிமையாளர் C Robinson
கப்பல் சென்றடைந்த துறைமுகங்கள்
கப்பல் அமெரிக்காவின் Gloucester துறைமுகத்தை வந்தடைந்தபோது அளிக்கப்பட்ட வரவேற்பு
இத்துடன் சம்பந்தப்பட்ட பத்திரிகைச் செய்திகள் போன்றன.
•ஓவியம் A4 அளவிலினில் அடக்கப்படவேண்டும்.
•ஓவியம் அனுப்பப்பட வேண்டிய கடைசித் திகதி 20th July 13
•அனுப்ப வேண்டிய முகவரி
a) Mrs.P.Athiroobasingam
Ammam kovilady, Next to new UC
KKS Road,
Valvettithurai
Jaffna, Srilanka
அல்லது
b) email - valvettithuraiorg@gmail.com ( Scanned attachment)
• ஓவியத்தின் வலது பக்கக் கீழ் மூலையில், உங்கள் பெயர், வயது, மற்றும் விலாசத்தை சிறிதாகக் குறிப்பிடவும்.
அத்துடன் வேறாக உங்கள் முழுப்பெயர், விலாசம், தொலைபேசி மற்றும் மின்னஞ்சல்களைக் குறிப்பிடவும்.
• போட்டியாளர்கள் தமது புகைப்படத்தையும் தனியாக இணைத்துக் கொள்வது விரும்பத்தக்கது.
அன்னபூரணி கப்பல் சம்பந்தப்பட்ட செய்திகள் மற்றும் படங்கள் என்பன எமது இணையதளமான valvettithurai.org இல், இடது பக்கத்தில் Florence C Robinson - அன்னபூரணி 75 ஆவது ஆண்டு நிறைவு எனும் பகுதியில் சேர்க்கப்படுகின்றன. ஆனாலும் இவை தற்பொழுது முழுமையானவை அல்ல.
புலம் பெயர் நாடுகளில் உள்ள போட்டியாளர்கள் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களுக்கு உரிய முறையில் பரிசில் அனுப்பப்படும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.