வல்வெட்டித்துறை ஆதிகோவில் கடற்பிரதேசத்தில் உள்ள நான்கு வான்களும் (வான் - கடற்பரப்பில்லிருந்து வள்ளம் மற்றும் படகுகள் போன்றவை கடற்கரையை அண்மிக்கப் பயன்படுத்தும் கடல் வழி) புனரமைக்கப்பட்டுள்ளன. பிரதேசவாசிகளின் தகவல்களின் படி, ஒவ்வொரு வானும் சுமார் 3 தொடக்கம் 4 அடி வரை ஆழப்படுத்தப்பட்டும், 20 தொடக்கம் 25 அடிவரை அகலப் படுத்தப்பட்டுமுள்ளன. ஆனாலும் இதை ஏனைய வழிகளில் உறுதிப்படுத்தப் பட முடியவில்லை.
மேற்குறிப்பிட்ட புனரமைப்பு வேலைகளின் மூலம் பருத்தித்துறையிலிருந்து தொண்டைமானாறு வரையிலான வான்கள் அனைத்தும் ஆழ அகலப் படுத்தப் படவுள்ளதாக அறிய முடிகின்றது.
படங்களில் ஆதிகோவில் பிரதேசத்தின் வான் வேலைகள் பூர்த்தியாக்கப் பட்ட இரு வான்களையும், மற்றும் பொலிகண்டி மற்றும் இன்பருட்டிப் பகுதியில் அகழ்வு வேலைகள் நடைபெறுவதையும் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.