வல்வெட்டித்துறை உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தின் 50 ஆவது நிறைவையொட்டி, அவ்விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டுவரும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்வுகள் காலை போட்டிகள் சற்று நேரத்திற்கு முன்னர் நிறைவுபெற்றன.
வல்வை உதயசூரியன் கழகத்தின் 50 வது ஆண்டு நிறைவு விழாவின் மூன்றாம் நாள் பார்வையாளர்களுக்கான நிகழ்சிகள் இன்று காலை 6.30 மணியிலிருந்து மதியம் 12.30 மணிவரை வெகு சிறப்பாக நடைபெற்றது.
முதலில் பெண்களுக்கான 10 km சைக்கிள் ஓட்டப் போட்டியானது, வல்வெட்டித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் கழக கொடியசைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பெண்களுக்கான 10 km சைக்கிள் ஓட்டப் போட்டியானது நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய வீதியிலிருந்து தொண்டைமானாறு சந்தியூடாக உடுப்பிட்டி சந்தியை அடைந்து, அங்கிருந்து அப்பா பள்ளிக்கூடம் ஊடாக பொலிகண்டி கந்தவன சந்தியை அடைந்து, ஊரணியூடாக மீண்டும் மடத்தடியிலுள்ள (மதவடி) உதயசூரியன் வளைவினில் உள்ள போட்டி முடிவுத்தானத்தை அடைந்தது.
பெண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டியில் மல்லாகம் RS விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த வீரர் முதல் பரிசான புதிய சைக்கிள் மற்றும் 5000/= பணப்பரிசை தட்டிச் சென்றார். இச்சைக்கிள் ஓட்டப் போட்டியில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வீராங்கனைகள் பலரும் பங்கு பற்றியிருந்தனர்.
அதனைத்தொடர்ந்து ஆண்களுக்கான 20 km மரதன் ஓட்டமானது ,நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய வீதியிலிருந்து தொண்டைமானாறு சந்தியூடாக உடுப்பிட்டி சந்தியை அடைந்து, அங்கிருந்து வதிரிச் சந்தியூடாக திக்கம் சந்தியை அடைந்து கடற்கரை வீதியினூடாக பொலிகண்டி ஊரணி வீதியினூடாக மடத்தடி உதயசூரியன் வளைவினில் உள்ள போட்டி முடிவுத் தானத்தை அடைந்தது. ஆண்களுக்கான 20 km மரதன் ஓட்டபோட்டியின் முதல் 3 வீரருக்கு தங்கப்பதக்கங்கள் வளங்கப்படவுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது நிகழ்வாக இடம்பெற்ற தம்பதிகளுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டியானது நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய வீதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு மடத்தடி உதயசூரியன் வளைவினில் உள்ள போட்டி முடிவுத் தானத்தை அடைந்தது. இங்கு தமது கணவன் மாரை முன்னிறுத்தி மனைவிமார் சைக்கிள் ஓடியதானது பார்வையாளர் கண்களுக்கு விநோதமாக இருந்தது.
அதனைத் தொடர்ந்து பெண்களுக்கான 4 x 1 km கழக அஞ்சல் நிகழ்வானது வல்வையின் வீதியினிலே இடம்பெற்று முடிந்தவுடன், வல்வை உதயசூரியன் கழகத்தினதும் வல்வெட்டிதுறையினதும் பாரம்பரிய மற்றும் கலைத்திறன் மிக்க விளையாட்டு நிகழ்வான வினோத உடைப்போட்டியானது நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய வீதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு வல்வையின் வீதி வழியே பார்வையாளர்கள் வீதியின் இரு மருங்கிலும் ஒன்று கூடியிருந்து ரசித்துக் கொள்ளும்படியாக மடத்தடியிலுள்ள வல்வெட்டிதுறை முத்துமாரியம்மன் கோவிலை அடைந்தது.
இப் போட்டியில் பங்கு பற்றிய அனைத்து போட்டியாளர்களும் தமது வினோத உடை கதாப்பாத்திரத்தினூடாக பொது மக்களுக்கு பல்வேறு செய்திகளை தெரிவித்துச் சென்றனர்.
பாரம்பரிய வினோத உடைப்போட்டியில் வினோத உடை கதாப்பாத்திரத்திரங்களாக பங்குபற்றி முதல் ஐந்து இடங்களைப் பெற்ற போட்டியாளர்கள் முறையே
1. வல்வை வைத்தீஸ்வரன் ஆலயத்திற்கு உழவாரப் பணி செய்வதற்கு வருகை வந்த அப்பர் சுவாமிகள்
2. டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு மற்றும் சுகாதார உத்தியோகத்தர்.
3. நூற்றாண்டு கால இராட்சத நண்டு.
4. மனித பரிமாண வழர்ச்சியின் ஆதிகால குரங்கு முதல் நவீன மனிதன்
5. பணிப்பெண்ணாகச்சென்று சுமைப் பெண்ணாக வந்த பத்மா.
மேலும் ஆறுதல் பரிசுகளை தட்டிச் சென்ற வினோத உடை கதாப்பாத்திரத்திரங்களாவன தெருவோர நாடகக் குழு, அவதார் மனிதர்கள், கீரை வியாபாரி, வீதி விபத்தால் பாதிக்கப் பட்டவர், கோமாளிகள் மற்றும் பஞ்ச பூதங்களை கட்டப் படுத்தும் நவீன மனிதன்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
S.S.Deivachandran (UK)
Posted Date: August 12, 2013 at 06:13
Thanks
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.