Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலும் சூரன் போர் சிறப்பாக நடைபெற்றது

பிரசுரிக்கபட்ட திகதி: 08/11/2013 (வெள்ளிக்கிழமை)
கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான கந்தசஷ்டி விரதத்தை தொடர்ந்து தொண்டைமானாறு செவ்வசந்நிதி முருகன் ஆலயத்திலும் சூரன்போர் இன்று மிகுந்த பக்தர்கள் மத்தியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 
 
இன்று பிற்பகல் சுமார் 4 மணியளவில் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் பூசைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து முருகன் பெருமான் கேடய வாகனத்தில் எழுந்தருளி சூரனோடு போர் புரியும் நிகழ்வு சுமார் 7  மணியளவில் நடைபெற்றிருந்தது.
 
முதலில் தாரகாசூரனுடன் பின்னர் சிங்கமுகனுடனும் அதனைத் தொடர்ந்து இறுதியில் சூரபத்மனுடன் போர்நிகழ்வு நடைபெற்றது.
 
சூரசங்காரத்தில் முருகப்பெருமான் பெற்ற வெற்றியால்,  சூரசம்கார தினத்தன்று முனிவர்களும் தேவர்களும் மகிழ்ச்சி கொண்டதாகப் புராணக் கதைகளில் கூறப்படுவதைப்போல், இன்று இங்கு செல்வச்சந்நிதி ஆலயவீதியில் முருகப்பெருமான் அடியார்கள் பக்திமயப்பட்டிருந்ததைக் காணக் கூடியதாகவிருந்தது.
 
இன்றைய தினம் இங்கு செல்வச்சந்நிதி ஆலயத்தில் இரவு முழுவதும் நான்கு சாமமும் பூசைகள் நடைபெற்று, அடியார்களின் கந்தசஷ்டி விரதத்தை முடித்து வைக்கும் முகமாக இன்றும் நாளையும் ஆலயத்திலும்,  ஆலயத்தைச் சுற்றியுள்ள மடங்களிலும் அன்னதானம் (பாறணைச் சாதம்) வழங்கப்படுவது வழமையானவொன்று என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
 
படங்களில் சூரசம்காரத்தைப் பார்ப்பதற்கும், தெய்வ தரிசனத்தைப் பெறுவதற்கும் யாழ் தீபகற்பத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்களையும், முருகப்பெருமானின் சூரசம்காரத்தையும் காணலாம்.
 
முருகப் பெருமானின் ‘திருக்கல்யாண வைபவம்’ நாளை நடைபெறவுள்ளது.

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.



கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
மரண அறிவித்தல்கள்
நாள்காட்டி
<<<Feb - 2038>>>
SunMonTueWedThuFriSat
 123456
78910111213
14151617181920
21222324252627
28      
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தமிழ் பெயர்கள்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்