Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

மாத காணொளிகள் - Monthly Videos

பிரசுரமாகும் காணொளிகள், வெளிநாடுகள் சம்பந்தப்பட்ட காணொளிகள் உட்பட, அனைத்தும் எமது இணையதள குழுவினரால் எடுக்கப்படுபவை ஆகும். 

The Videos, including those Videos of overseas as well, in this section published are taken by our Web team only.

 

 

Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
Uploaded Date: 04/02/2015
Sangupiddy over Bridge

Sangupiddy Bridge (Also called Changkupiddy Bridge) on Mannar – Pooneryn - Karativu (A32) Road is a road bridge across Jaffna Lagoon in northern Sri Lanka. It connects Sangupiddy in Kilinochchi District to Karaitivu in Jaffna District. It is one of only two road bridges connecting the densely populated Jaffna Peninsula with the mainland, while other road bridge being well known Elephant pass.

Both Elephant pass bridge and Sangupiddy bridge had played a great role during the war in the past between government forces and LTTE.

Having commenced on 20th December 2009, the new over bridge project has been completed on 16th of January 2011, costing Rs 890 million.

சங்குப்பிட்டி மேம்பாலம் – வடக்கின் ஒரே ஒரு மேம்பாலம்
கானொளியில் காணப்படுவது வடக்கின் ஒரே ஒரு மேம்பாலமாகக் கருதப்படும் சங்குப்பிட்டி மேம்பாலம் ஆகும். இது யாழ் தீபகற்பத்தையும் மன்னார் பெரு நிலப்பரப்பையும் பூநகிரி காரைதீவு (A32) வழியாக, யாழ் கடல் நீரேரி மேலாக இணைக்கின்றது.

இத்திட்டம் 20 டிசம்பர் 2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 16 ஜனவரி 2011 ஆம் ஆண்டு 890 ரூபா மில்லியன் செலவில் கட்டிமுடிக்கப்பட்டது.

ஆனையிறவுக்கு அடுத்ததாக யாழ் தீபகற்பத்தை நாட்டின் பெருநிலப்பரப்புடன் தொடுக்கும் இந்த 2 பாலங்களும் கடந்த காலங்களில் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமர்களில் மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தனவாக அமைந்திருந்தன.
மாட்டுப் பட்டியும், தில்லையடிக் குளமும்
Dairying & Thillaiyadi Kulam
Uploaded Date: 23/11/2014
மாட்டுப் பட்டியும், தில்லையடிக் குளமும்

காணொளியில் காணப்படும் மாட்டுப் பட்டி உடுப்பிட்டி - வல்லை வீதியில் உள்ள தில்லையடிக் குளத்தையொட்டி அமைந்துள்ளது. மாடு வளர்ப்பு யாழ்பாணத்தின் பல பகுதிகளிலும் சிறு மற்றும் பெரிய அளவுகளில் இன்றும் மேற்கொள்ளப்படுகின்றது.

காணொளியில் காணப்படும் வறண்டு இருக்கும் நிலப் பிரதேசம் தில்லையடிக் குளம் ஆகும். சுமார் 40,000 சதுர மீட்டர் பரப்பளவுடைய இக்குளம் இப் பிரதேசத்தில் உள்ள மிகப் பெரிய குளங்களில் ஒன்றாகும். இங்கு மழை காலங்களில் முதலைகள் தங்குவதும் கவனத்தில் கொள்ளக்கூடியதொன்றாகும்

Dairying & Thillaiyadi Kulam

Video shows Dairying of Cows and a Pond, named as 'Thillaiyadi Kulam' in Tamil. Dairying of Cows are still common in Jaffna Peninsula in small and large scale.

'Thillaiyadi Kulam' having an area of 40,000 square meter, which facilitates the surrounding farm lands. The pond is said to have Crocodiles during rainy season.

The area shown in this Video is located along Thondaimanaru - Udupitty road, Close to Pokkanai.
வல்வை சிவன் கோவில் மடம்
Valvai Sivan kovil madam
Uploaded Date: 16/08/2014
வல்வை சிவன் கோவில் மடம்

பின்னனியில் குருவிகளின் சத்தம், குறைந்தது 40 வருடங்களாகவேனும் அதே இடத்தில் அமைந்துள்ள அலரி மரம், பழைய கோபுரம், நெடியவீதி, இவற்றுடன் ஒன்றாகவுள்ளது சுமார் 115 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த வல்வை சிவன் கோவில் மடம். வல்வெட்டித்துறை சிவன் கோவிலின் மேற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது இந்த புராதன கட்டடம்.

இந்த மடத்திலேயே வல்வையின் முதலாவது குறிப்பிடக்கூடிய அடையாளமான புலவர் சங்கரநாதர் வயித்தியலிங்கர் (வயித்தியலிங்கப்பிள்ளை) அவர்கள் ‘பாரதி நிலைய முத்திராட்சகசாலை’என்னும் பெயரில் அமைந்த அச்சகம் ஒன்றை நிறுவி அத்துடன் சைவசமயத்தைப் பரப்பும் நோக்கில் ‘’சைவ அபிமானி’’ என்னும் மாத இதழ் ஒன்றை வெளியிட்டும், தனித்துவமான தமிழை வளர்க்கும் நோக்குடன் தமிழ் பாடசாலையையும் நடாத்தியிருந்தார்.

Valvai Sivan kovil madam

Sounds of little birds in the surroundings, partly built and abandoned structure, called as ‘’Kopuram’’ in Tamil, a 40 years old small tree with purple flowers, called ‘Alari’ in tamil, a 200 meter long outer road of the temple – with all, over here, a 115 years old ‘Sivan kovil madam’ is situated on the western side
of the Valvettithurai Sivan kovil temple, in the Jaffna peninsula, Srilanka.

VVT’s first remarkable identity, Pandit Sangaranathar Vayithiyalingar (Vayithiyalingapillai) had formed a Tamil press called as ‘Barathi nilaiya muththiradsakasalai’ in this old ‘madam’, where he had published a monthly ‘Saiva apimaani’ in order to bring up the knowledge of the ‘Hindutuwa’ (Hinduism) and conducted a Tamil school so as to bring up the Tamil language, a language which does not have any substitutes,
unlike many other languages spoken at present.
கொம்மந்தறை தரவைக் குளமும், ஆட்காட்டி குருவிகளும்
Kommantharai Tharavai Kulam & Lapwings
Uploaded Date: 03/07/2014
கொம்மந்தறை தரவைக் குளமும், ஆட்காட்டி குருவிகளும்

காணொளியில் காணப்படுவது வல்வையின் புறநிலக் கிராமமான கொம்மந்தறையில் உள்ள தரவை குளமும் அதனைச் சூழவுள்ள பகுதிகளும் ஆகும். மழை காலங்களின் போது மழை நீரைச் சேகரிக்கும் வகையிலும், சேகரித்த நீரை அருகில் அமையப்பெற்ற வயல் நிலங்களிற்கு பாய்ச்சும் வகையிலும் குளம் அமைக்கப்பட்டுள்ளது.

குளத்தின் அமைப்பு ஏராளமான ஆட்காட்டி குருவிகளின் (ஆள் காட்டி குருவி) வரத்திற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளதை காணக் கூடியதாகவும் உள்ளது.

Kommantharai Tharavai Kulam & Lapwings

Video shows a small pond, named 'Tharavai Kulam' in Tamil, located at Kommantharai, a village adjacent to Valvettihtrai, having vast area of farm land. The pond has been made is such a way that water is getting collected during rainy season and discharged to the farm land as required.

In addition to other shore birds, numerous Lapwings ('Aal kaaddi' i n Tamil) are seen in this pond most of the time, thorough out the year.
வல்வை சிவன் கோவில் கோபுரம்
Valvai Sivan kovil Kopuram
Uploaded Date: 29/05/2014
வல்வை சிவன் கோவில் கோபுரம்

காணொளியில் காணப்படுவது வல்வெட்டித்துறை சிவன் கோவிலின் மேற்குப் பக்கத்தில் அமைந்துள்ள கோபுரம் ஆகும். வல்வையைச் சேர்ந்த திரு.நாகரத்தினம் அவர்களால் கட்ட ஆரம்பிக்கப்பெற்ற இந்த கோபுரம் பூர்த்தியாக்கப்படவில்லை. பூர்த்தியாக்கப்பட்டிருந்தால் இது இலங்கையில் மிகவும் உயரமான கோபுரமாக இருந்திருக்கலாம்.

வல்வெட்டித்துறை சிவன் கோவில் திரு.பிரபாகரன் அவர்களின் மூதாதையர்களிற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Valvai Sivan kovil Kopuram

Video shows the partly built Tower (‘Kopuram’ in Tamil) of Valvettithurai Sivan Temple, which was built by Mr.Nagarathnam. If this Tower was completed, It would probably have been the tallest ‘Kopuram’ in Srilanka.

Valvettithurai Sivan Temple belongs to Mr.V.Pirapakaran’s ancestors.
வல்வை அம்மன் கோவில்
Valvai Amman Kovil
Uploaded Date: 29/04/2014
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில்

வல்வெட்டிதுறையில் பல கோவில்கள் மிக நெருக்கமாக இருந்தாலும், மிக அதிகளவு உள்ளூர் வாசிகளாலும், புலம்பெயர் வல்வையர்களாலும் தரிசிக்கப்படும் கோயில், காணொளியில் காணப்படும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்மன் கோவில் ஆகும். இது யாழ் தீபகற்பத்தின் வட கோடியில், பருத்தித்துறை-காங்கேசந்துறை வீதியில்,
வல்வெட்டிதுறைச் சந்தியிலிருந்து மேற்காக சுமார் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இங்கு வீற்றிருக்கும் அம்மன் தமிழகத்தின் தென் கோடியில் அமைந்துள்ள வேதாரண்யம் நகரில் உள்ள கோடியாக்கரை என்னும் பகுதியில் இருந்து வந்ததாக, இங்கு கோவிலில் முற்பக்கத்தில் உள்ள சித்திரங்கள் தெரிவிக்கின்றன. வல்வை அம்மன் கோவிலின் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளான தீர்த்தத் திருவிழாவின் அன்று இரவு நடைபெறும் இந்திரவிழா, யாழ் தீபகற்பத்தில் நடைபெறும் பெருவிழா என்றால் மிகையாகாது.

காணொளியில் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்மன் கோவில், ஆலய கோபுரத்தின் கிட்டப் பார்வை, ஆலயத்தைச் சுற்றியுள்ள மடங்கள், ஆலய முற்பக்க மற்றும் தெற்குப் பக்க வீதி, கல்யாண மண்டபம், வல்வை நகரசபை மற்றும் ஆலயத்தின் அருகிலேயே அமையப் பெற்றுள்ள வல்வை சிவன் கோவில் என்பவற்றைக் காணலாம்.


Valvettithurai Sri Muthumariyamman temple

Even though congested Valvettithurai has got many temples, Valvettithurai Sri Muthumariyamman kovil always attracts more devotes, including those displaced. The great Índra Vizha’ which used to take on place on the last day of the annual festival, is considered as one of the notable event in the Jaffna Peninsula.

The history shown on the entrance of the temple, i.e underneath of the roof, indicates that the Muthumariyamman had come from Kodiyakarai, the southern tip of Tamil nadu, India. Valvettithurai Sri Muthumariyamman temple is located along the Point Pedro – KKS road, about 500 meter west of VVT junction.

Video shows relevant temple, close look at its Tower, Temple\'s outer road (Front and South), surrounding buildings of VVT UC, Sri Muthumariyamman Wedding hall, Madams, and the Sivan Temple, which is located adjacent to Amman temple.
தீருவில் – வல்வையின் வெளி
Theeruvil – Open space of Valvai
Uploaded Date: 23/04/2014
தீருவில் – வல்வையின் வெளி

உணா மரங்கள், அவற்றினால் சூழப்பட்டுள்ள இடிபாடுகளுடன் கூடிய விடுதலைப் புலிகளின்
யுத்த கால சிலை ஒன்று, அம்மன், சிவன், பிள்ளையார், முருகன் என்னும் வரிசையில்
4 ஆவதாக அமையப்பெற்றுள்ள முருகையன் கோயில், புதிதாக கட்டப்பட்டு வரும் புட்கரணி
பிள்ளையார் கோயில் முகப்பு, சிவன் கோவில் கோபுரம், அம்மன் கோவில் கோபுரம்,
தீருவில் விளையாட்டுக் கழக மைதானம், பனங்க் கூடல், பறவைகளின் ஒலிகள், 90 காலப்பகுதியில் அமைக்கப்பெற்ற நேர்த்தியான L வடிவ வீதி, Airtel தொலைத் தொடர்பு கோபுரம், முன்னாள் தூபியும், தற்போது வல்வை நகரசபையால் பெயரிடப்பட்டுள்ள வல்வை தீருவில் பொதுப் பூங்கா, அதற்குள் சில சவுக்கு மரங்கள், தீருவில் குளம், மணல் அள்ளும் ‘டிப்பர்கள்” பின்னனியில் ஒலிக்கும் தொலை தூரத்தில் இருந்து கேட்கும் பக்திப் பாடல்கள் – இவற்றை ஒரு அடி கூட நகராமல் ஒரே இடத்தில் நின்று பார்க்கவும் கேட்கவும் கூடிய இடம் தீருவில் வெளி. நெருக்கமான வல்வை நகருக்குள், நகரின் மையப் பகுதியிலிருந்து வெறும் 500 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இந்த வெளி.

Theeruvil – Open space of Valvai

Trees called Unaa in Tamil, a destroyed LTTE’s structure surrounded by Una trees, Hindhu god Murugan temple called as Murukaiyan temple, situated as the 4th one from Parvathi, Siva and Vinayaka, the new little tower of Putkarani Pillaiyaar temple, Tower of Valvai Sivan temple, Tower of Valvai Amman temple,
Theruvil Sports club ground, Group of Palmyra, Sound of birds, L shape perfectly built road, Airtel cell phone tower, the newly declared ‘Theruvil public park”, Savukkuk trees, Theruvil pond, devotional songs
from far distance – We could see all in one place with out moving even one step. This prominent open place is located just 500 meters away from VVT junction, which is relatively considered as one of the congested area in Jaffna Peninsula.
பாம்பன் பாலம்
Pamban Bridge
Uploaded Date: 23/02/2014
பாம்பன் பாலம்

இலங்கையில் உள்ள தமிழர்கள் நாம் பாம்பன் பாலத்தை பலமுறை உச்சரித்து இருக்கின்றோம். காரணம் இது பாக்கு நீரிணையில், தலைமன்னாருக்கு மிக அண்மையில் உள்ளதால். 1800 இல் ‘’இந்திய-இலங்கை திட்டம்” பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டதுபோல், ஒரு பாலம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில்,
அதாவது தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் அமைக்கப்பட்டால், நாம் இப் பாம்பன் பாலத்தின் வழியாக கண்டிப்பாகச் செல்லநேரிடும்.

2006 மீட்டர் நீளமான பாம்பன் பாலம் இந்தியாவில், மகாராஷ்டிராவில் அமைந்துள்ள பந்திரா-வேர்லி பாலத்துக்கு அடுத்த நிலையில் அமைந்துள்ள 2 ஆவது பெரிய பாலமாகும். இது தமிழகத்தின் பாம்பன் தீவை இந்தியாவின் பிரதான நிலப்பரப்புடன் இணைக்கின்றது. இந்துக்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது தரிசிக்க விரும்பும் இரு தலங்களில் ஒன்றான இராமேஸ்வரம்
(அடுத்தது உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள காசி) செல்வதற்கு பாம்பன் பாலம்,
குறிப்பாக புகையிரதத்தின் மூலமாக இந்தியாவின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் செல்வதற்கு
பாம்பன் பாலம் பிரதான வழியாகவுள்ளது.

Pamban Bridge

We Tamils have uttered the word “Pamban’’ many times in the past, due to its existence in the Palk strait close to Thalaimannar. If there would be a land route between Srilanka and India, in other words a Bridge between Thalaimannar and Danushkodi as proposed on “Índo-Ceylon project’’, which was sent to
British parliament in 1880, we all would be travelling through the Pamban Bridge, which connects Pamban Island with main land of India.

The 2006 meter Pamban Bridge is first cantilever bridge and second longest bridge after Bandra – Worli sea link in Maharastra, India. Pamban Bridge facilitates rail connectivity to the Hindhu pilgrim centre of
Rameswaram temple – the one the temple where most of us would like to visit.
வல்வெட்டிதுறை கரை, கடல், டோரா - Valvettithurai shore, sea & Dora
Uploaded Date: 11/02/2014
வல்வெட்டிதுறை கரை, கடல், டோரா

குறித்த காணொளி வல்வெட்டிதுறையின் மயிலியதனைப் பகுதியில் வைத்து காட்சியாக்கப்பட்டது. படத்தின் ஆரம்பத்தில் காட்டப்பட்டுள்ளது கடற்கரைப் பிரதேசத்துக்கே உரித்தான அழகான தென்னை மரங்கள். அடுத்து தெரிவது காங்கேசந்துறைக் கடல். அதனைத் தொடர்ந்து கடலில் தெரிவது பருத்தித்துறைப் பக்கமாகச் செல்லும் எல்லோராலும் அறியப்பட்ட டோரா - இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட அதிவேக விசைப்படகு.

அடுத்து இயற்கையாக அமையப்பெற்ற முருகைக்கற்கள், கடல் அரிப்பைத் தடுக்க வல்லவை. அடுத்து கடலுக்குள் நீண்டு தெரியும் மரங்கள் திக்கம் முனைப்பகுதியாகும். தொடர்ந்து தென்னை மரங்கள், முன்னர் அமையப்பெற்றிருந்த கடலைக் கண்காணிக்கும் சிறிய பாதுகாப்பு அரண், அண்மையில் காலமாகியிருந்த அன்னை முத்துமாரியம்மன் டிரவல்ஸ் உரிமையாளர் திரு.ராசாவின் வீடு, மற்றும் போர் காலங்களில் தரைமட்டமாகியுள்ள
வீடுகள் என்பவையாகும்.

இவ்வாறான கடற்கரையோர வீடுகள் வெளிநாடுகளில் ஏன் மும்பாயின் ”யூகு பீச்” போன்ற இடங்களில் பல கோடிகளைத்தாண்டும்.

வல்வெட்டிதுறைக் கடலை நாம் பொதுவாக பாக்கு நீரிணையின் ஒரு பகுதி எனக் கூறி வந்தாலும், இவை வங்காள விரிகுடாவின் ஒரு பகுதியேயாகும்.

Valvettithurai shore, sea & Dora

The Video was taken at Mayiliyathanai, Valvettithurai, which shows Coconut trees, K K S seas, a fast moving Israeli built Dovra, reefs which protect the shore from being washed away, Thikkam Point, a previously used sentry point, the house of Annai Muthumariyamman Travels owner Mr.Rasa (late), and finally the destroyed houses during early war.

Valvettithurai Sea is generally called as part of Palk Strait, even though it is part of Bay of Bengal.
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி - Thondaimanaru Selva sannithi
Uploaded Date: 07/01/2014
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி

யாழ்ப்பாணத்தில் மிக அதிகளவில் பக்தர்கள் அன்றி பலராலும் வருகை தரப்படும் ஒரு சில இடங்களில் தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயம் ஒன்றாகும். இது வடமராட்சியையும் வலிகாமத்தையும் பிரிக்கும் தொண்டைமானாறு - சுண்டிக்குளம் கடல் நீரேரியில் வடமராட்சிப் பகுதியில் மிகவும் ரம்மியமான சூழலில் அமைந்துள்ளது.

எரிந்த பாரிய சித்திரத் தேரும், இச் சித்திரத்தேருக்காக அழிக்கப்பட்ட மரங்களும்,
பாழடைந்து வரும் பல பழைய மடங்களும் இவ் ஆலயத்தின் கவலை கொள்ள வைக்கும் விடயங்கள்.

Thondaimanaru Selva sannithi

Thondaimanaru Selva sannithi Murugan temple is one of the fewer places visited by thousands of peoples in the Jaffna Peninsula, Srilanka.

Srilanka’s largest chariot destroyed in 1985, numbers of huge green trees removed for the movement of the same chariot, number of abandoned halls (madams in Tamil) are still causing sorrow to those who have seen Selva sanathi since long ago.

Selva sannithi Murugan temple is located at Thondaimanaru, along the Thondaimanaru-Chundikulam lagoon, between Vadamaradchi and Valikamam in the Jaffna Peninsula, Srilanka.


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Jan - 2025>>>
SunMonTueWedThuFriSat
   12
3
4
5
6789
10
11
12
13
14
15
16
17
18
19
202122232425
26
27
28
29
3031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai