வல்வை நகரசபை உறுப்பினர் திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம் இன்று காலமானார். இவருக்கு வயது 69. கடந்த சில நாட்களாக சுகவீனமுற்ற நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிளந்துள்ளார். கடந்த உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
எதிர்வரும் 4 மாதங்களின் பின்னர் இடம்பெறவுள்ள நகரசபைத் தலைவர் தெரிவில் இடம்பெறவுள்ளவர்களில் இவரும் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தார்.
பொதுச் சேவைகள் பலவற்றில் ஈடுபட்டுவந்த இவர், கடந்த காலங்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவாஜிலிங்கத்துடன் சேர்ந்தும் பல போராட்டங்களில் பங்குபற்றிவந்தார். வல்வை ஊரணி வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்திலும், வல்வை சிதம்பரக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்திலும் இவர் கடந்த பல வருடங்களாக சேவையாற்றி வந்தார்.
அத்துடன் வல்வை சனசமூக சேவா நிலையத்தின் பல பொறுப்புக்களில் கடந்த பல வருடங்களாக சேவையாற்றிவந்ததுடன், வல்வை சனசமூக சேவா நிலையத்துடன் நெடிய காலம் பயணித்த வந்த ஒருவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.