R.S என்று அழைக்கப்படும் திரு.R.S.சிவசுப்ரமணியம் (S.L.A.S, JP) அவர்களின் 1 ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்றாகும்.
R.S என்று அழைக்கப்படும் திரு.R.S.சிவசுப்ரமணியம் (S.L.A.S, JP) அவர்கள், வல்வையின் மூத்த கல்விமான்களில் ஒருவர்.
யாழ் வல்வை சிதம்பரக் கல்லூரியின் மாணவனான திரு.R.S அவர்கள் இலங்கை அரசின் பல உயர் பதவிகளில் பதவி வகித்தவர். அதிலும் குறிப்பாக சுகாதார அமைச்சின் செயலாளராகவும், பின்னர் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாட்டாளாராகவும் கடமையாற்றியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் திரு.R.S அவர்கள் முழு
இலங்கைக்கும் உரிய J.P தகமையையும் பெற்றிருந்தவர் ஆவார்.
சிறந்த கல்விமான், சிறந்த தகமை, மொழியாற்றல், எல்லோருக்கும் உதவும் மனப்பாங்கு என பல தகமைகளைக் கொண்டிருந்த இவரின் உதவியால் பலர் பலவழிகளில் பயன் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
திரு R.S.அவர்கள் யாழ் வல்வை சிதம்பராக் கல்லூரியின், கொழும்பு பழைய மாணவர் சங்கக்கிளையின் தலைவராக இதுவரை தனது மறைவு வரை இருந்து வந்துள்ளதுடன், அவர் தலமை வகித்த காலங்களில் இக்கிளையை பலப்படுத்துவதில் சிறந்த வழியில் பங்காற்றியிருந்தார்.
இவரின் சேவை நலனைப் பாராட்டி, இரு வருடங்கள் முன்பு பொது மக்கள் இவரைக் கெளரவப்படுத்தும் வகையில் வல்வெட்டித்துறையில் விழா ஒன்றை எடுத்திருந்தமை இங்கு மிகவும் சுட்டிக்காட்டக் கூடியவொன்றாகும்.
சுகவீனமுற்ற நிலையில் கடந்த வருடம் ஜூலை மாதம் 13 ஆம் திகதி சிலாபத்தில் மரணமான இவர் மணமாகதவர் ஆவார்.
இறையடி எய்திய ஏந்தர் ( சிவா அண்ணா)
R.S என பலராலும் பண்போடு அழைக்கப்பட்டவர்
சிவா அண்ணா என இளையோரால் மதிக்கப்பட்டவர்
பதவிகளின் உச்சங்களில் இருந்தபோதும்
பலருடனும் பண்புடனே பழகியவர்
சீறிச் சினவாத சிரித்தமுகம்
இவரின் சிந்தனைகள் எல்லாம் சேவைகள் பல செய்வதிலேதான்
ஊரின் கல்வி வளர்ச்சியில் இவரின் சேவை சிதம்பரா பழைய மாணவர் என வெளிப்பட்டது
கொழும்பில் அமைந்துள்ள பழைய மாணவர் சங்க தலைவராய் பல வருடங்கள் பூர்த்தி செய்தவர்
அன்பிக்கொரு துணையை தான் வரித்துக் கொள்ளாவிடினும்
ஆசையுடன் பல உள்ளங்களை எம்முடன் இணைத்துக்கொண்டவர்
இவர் வழியில் எம்மவர்கள் தொடர்ந்து சென்று சேவை பல ஆற்றிநிற்க