முன்னாள் சிறந்த அறிவிப்பாளாரும், வல்வையின் பஜனைகாரர்களில் ஒருவரும், இளைப்பாறிய வல்வை நகரசபை உத்தியோகஸ்த்தருமான திரு. சோமசுந்தரம் சிவஞானசுந்தரம் (லெச்சி) இன்று பிற்பகல் வல்வையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவருக்கு வயது 78.
முன்னாள் சிறந்த பல்துறை விளையாட்டுத்துறை வீரரான இவர், வல்வையில் முதலாவதாக தோற்றுவிக்கப்பட்ட விளையாட்டுக் கழகமான 'ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் மூத்த உறுப்பினரும் ஆவார்.
அத்துடன் வல்வை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் ஆலய சமய நடைமுறைகளை பெரிதும் அறிந்திருந்த சிவ தொண்டர்கள் சிலரில் பிரதானமானவர்களில் ஒருவரும் ஆவார்.