வல்வையின் பிரபல்யங்கள் என்னும் எமது இந்தப் புதிய பகுதியில் முதலாவதாக இடம்பெறுபவர் அமரர் திரு. சி.மாணிக்கவாசகர் (C.C.S) அவர்கள் ஆவார்கள்.
வல்வெட்டிதுறையைப் பொறுத்தவரை மிக உயர்ந்த அரச மற்றும் அரசசார் பற்ற துறைகளில் பணியாற்றியவர்களில் மிக முதன்மையானவர் இவர்.
Ceylon Civil Service என்னும் இலங்கையில் முன்னர் அமையப்பெற்றிருந்த அரசசேவைகளுக்கான அதியுயர் கல்வித் தகமையைப்பெற்றிருந்தவர். பெரும்பான்மை இனத்தைச்சார்ந்த ஒருவரை மணம்புரிந்துகொண்டதாலும், சேவைக்காலத்திலும் அதன் பின்னரும் வல்வையில் வாழாத காரணத்தாலும் எம்மால் மறக்கப்பட்டவர்.
எமது வேண்டுகோளிற்கிணங்க திரு.சி.மாணிக்கவாசகர் அவர்களைப் பற்றி Valvettithurai.org இற்காக தகவல்களைத் திரட்டி எழுதியிருப்பவர் வல்வையைச் சேர்ந்த திரு.இரா.சத்துருசங்காரவேல் அவர்கள்.
சிவ.சி.மாணிக்கவாசகர்
வல்வை மண் பெற்றெடுத்து மறைந்துவிட்ட அறிஞன், தனையாளன், கல்விமான், பிரமுகன் சிவ.சி.மாணிக்கவாசகர் அவர்கள் 1931 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 16 ஆம் திகதி வல்வையில் பிறந்திருந்தார்.
பிறப்பும் குடும்பமும்
வல்வைச் சந்தியில் அமைந்துள்ள சடையாண்டி கோவிலடியைச் சேர்ந்த, ஒய்வு நிலை உதவி நில அளவை அத்தியட்சகர் சின்மையானந்தகுரு மற்றும் யோகாம்பிகை அம்மா ஆகியோரின் புதல்வர்களில் ஒருவராவார்.
கல்வியும் பட்டங்களும்
தனது ஆரம்பக் கல்வியை வல்வை சிவகுரு வித்தியாசாலையிலும் பின்னர் வல்வை சிதம்பராக்கல்லூரி, யாழ் மத்திய கல்லூரி மற்றும் பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியிலும் தொடர்ந்திருந்தார்.
தொடந்து தனது பட்டப்படிப்பை இலங்கையின் பேரதேனிய பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டிருந்தார்.
பெற்ற பட்டங்கள்
1. B.A (Honours) (1950 – 1954)
2. 2. Ceylon civil service (CCS) 1955
வகித்த பதவிகள்
1. ஆசிரியர், சென் அந்தனிஸ் கல்லூரி, கண்டி (Kandy St Anthony’s college) – 1954
2. உள்ளூராட்சி உதவி ஆணையாளர் (A.C.L.G)
கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு – (1955-1961)
வடக்கு மாகாணம், யாழ்பாணம் – (1961-1967)
3. உள்ளூராட்சி உதவி ஆணையாளர் (C.L.G) – 1967
4. மேலதிக அரச அதிபர் (G.A)
அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி – 5 வருடங்கள்
இவற்றுக்கும் மேலாக பல உயர் பதவிகளைப் பெற்றுச் சேவையாற்றியுள்ளார். அவற்றில் சில,
1. Chairman of Graphic corporation
2. Director of Scientific affairs
3. Senior assistant secretary to the ministry of industries and Scientific affairs And the head of the UN programmes of the ministry.
4. Additional secretary of ministry of regional development and Scientific affairs
5. Secretary to the ministry of Power and Energy (1994 இல் ஓய்வு பெறும் வரை)
அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றபின், இலங்கை அரசால் மீண்டும் சேவைக்கு அழைக்கப்பட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் “நிகழ்ந்த ‘ஆட்கடத்தல் மற்றும் காணாமல் போதல்’ ஆகியவற்றை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி
ஆணைக்குழுவில் செயலாளராக நியமிக்கப் பெற்று சேவையாற்றியுள்ளார்.
தன் சேவைக்காலத்தில் ஐக்கிய இராச்சியம் உட்பட்ட பல நாடுகளில் பயிற்சிகள் பலபெற்று பல உயர்மட்டக் கருத்தரங்குகளில் பங்குபற்றியுள்ளார். ஜெனிவாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் சம்மேளணத்தின் 6 ஆவது மாநாட்டில் இலங்கை அரசின் பிரதிநிதியாக கலந்துகொண்டிருந்தார்.
இவரது ஆக்கங்கள்
1. Monograph on Local Government in Srilanka need for a new approach - 1974
2. Report on Mineral industry and chemical industry in Srilanka - 1977
3. Hand book of the Ministry of industries and Scientific affairs
மறைவு
2003 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 17 ஆம் திகதி ஆகும்.
வல்வையின் பெருமையை முற்றாக வெளிக்கொணரவேணுமெனின் திரு.சி.மாணிக்கவாசகர் போன்றவர்களும் நிச்சயம் அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்பது எமது திடமான நம்பிக்கை.