வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையின் முன்னாள் மாவட்ட வைத்திய அதிகாரி Dr.மயிலேறும்பெருமாள் இன்று காலமானார். இவருக்கு வயது 80
Dr. மயிலேறும் பெருமாள் அவர்கள் மிகவும் இக்கட்டான போர்க் காலத்தில் வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலையில் சுமார் 10 ஆண்டுகள் தொடச்சியாக கடமையாற்றியிருந்தார்.
உள்நாட்டு போர் முடிவுற்ற பின் விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களின் தாயார் வேலுப்பிள்ளை பார்வதியம்மா அவர்களை, மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலையில் வைத்து இவர் மறையும் வரை வைத்துப் பராமரித்து வந்தவர் Dr. மயிலேறும் பெருமாள் அவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.
பார்வதியம்மாவுடன் Dr. மயிலேறும் பெருமாள்
இதைவிட தொடர்ச்சியாக வன்னி மற்றும் வடமராட்சி கிழக்கு என தொடந்து தாயகப் பகுதியிலேயே வைத்தியப் பணி புரிந்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெற்ற வல்வெட்டித்துறை உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான வேட்பாளாராக Dr. மயிலேறும் பெருமாள் அவர்கள் போட்டியிட்டிருந்தார்.
சிறந்த தடகள வீரரும், உதைபந்தாட்டவீரருமான இவர் வல்வை புளூஸ் விளையாட்டுக் கழக ஸ்தாபகர்களில் ஒருவரும் ஆவார். சமூக சேவையாளருமான, சிறந்த நிர்வாகியுமான, இவர் வல்வை சிதம்பரக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தில் பல வருடங்கள் சேவையாற்றியிருந்தார்.