வல்வை கல்வி மன்ற ஸ்தாபாகர்களில் ஒருவரான கலாநிதி திரு. செளந்தராஜ் பிலிப் மோகன் இன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் காலமானார். இவருக்கு வயது 64.
வல்வை சந்தியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் வல்வை கல்வி மன்ற ஸ்தாபகர்களில் ஒருவர் என்பதுடன் பகுதி நேர ஆசிரியராகவும் கடமையாற்றி இருந்தார்.
இன்று காலை அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் காலமான வல்வையைப் பிறப்பிடமாகக் கொண்ட கலாநிதி பிலிப் மோகன் அவர்கள் அமெரிக்காவின் விண்வெளி ஆராச்சி நிறுவனமான நாசா வில் (Nasa) 2 ஆண்டுகள் பணியாற்றி இருந்தார்.
கலாநிதி பிலிப் மோகன் சவுந்தரராஜ் அவர்கள் தனது பாடசாலை கல்வியை கொழும்பு Royal college இலும், பின்னர் Bsc physics special பட்டப் படிப்பை யாழ் பல்கலை கழகத்திலும் மேற்கொண்டார்.
அதன் பின்னர் Msc. PhD Solid state ஐ Vanderbilt University Nashville Tennessee இலும் மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இவர் நாசா (NASA Houston Texas) 1988-1989 ஆண்டுகளில் பணி ஆற்றி இருந்தார்.
இவர் வல்வை கல்வி மன்றத்தின் ஸ்தாபகர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரின் ஒரு சகோதரியும் சகோதரனும் 1992 ஆம் ஆண்டு வல்வை நெடிய காட்டில் இடம் பெற்ற ஆகாய குண்டு வீச்சு ஒன்றில் மரணமடைந்திருந்தார்கள்.