Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

செய்திகள்


3 வது கால் இறுதியாட்டத்தில் இளவாலை யங்கென்ரிஷ் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது.
பிரசுரிக்கபட்ட திகதி: 17/12/2012 (திங்கட்கிழமை)    
வல்வை சிதம்பரக்கல்லூரி மைதானத்தில் ஆதிசத்தி விளையாட்டுக் கழகம் நாடாத்திவரும் கால்பந்தாட்ட தொடரின் மூன்றாவது கால் இறுதியாட்டத்தில் இளவாலை யங்கென்ரிஷ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து அண்ணாசிலையடி விளையாட்டுக் கழகம் மோதியது.
[மேலும் வாசிக்க...]
பதவிகள் வெற்றிடத்திற்கான அரசின் வர்த்தமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 17/12/2012 (திங்கட்கிழமை)    
பதவிகள் வெற்றிடத்திற்கான இலங்கை அரசின் வர்த்தமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்டு, 14 ஆம் திகதியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் பல தரப்பட்ட வெற்றிடத்திற்கான விபரங்கள் தெரிவிக்கப்படுள்ளன. சம்பந்தப்பட்ட அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளன.
[மேலும் வாசிக்க...]
க.பொ.த (சா/த) விஞ்ஞான பாடவினாத்தாள் விவகாரம் ஜனாதிபதியிடம் ஆசிரியர் சங்கம் முறைப்பாடு
பிரசுரிக்கபட்ட திகதி: 17/12/2012 (திங்கட்கிழமை)    
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாட வினாத்தாள், குறித்த பரீட்சைக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டதா என எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க உடனடியான உண்மையான விசாரணை நடத்தப்படவேண்டும் எனக்கோரி இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திடமும், ஜனாதிபதியின் செயலாளரிடமும் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
2 வது கால் இறுதியாட்டத்தில் கரவெட்டி கொலின்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது
பிரசுரிக்கபட்ட திகதி: 16/12/2012 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
ஆதிசத்தி விளையாட்டுக் கழகம் நடாத்திவரும் உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது கால் இறுதியாட்டத்தில் பொலிகை பாரதி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து கரவெட்டி கொலின்ஸ் விளையாட்டுக் கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் கரவெட்டி கொலின்ஸ் விளையாட்டுக் கழகம் (5 : 1) என்ற கோல்கணக்கில் கொலின்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றியிட்டி அரையிறுதிக்கு முன்னேறியது.
[மேலும் வாசிக்க...]
முதலாவது காலிறுதியாட்டத்தில் அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது
பிரசுரிக்கபட்ட திகதி: 16/12/2012 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை ஆதிசத்தி விளையாட்டுக் கழகம் யாழ்ப்பாணத்தின் முன்னணி அணிகளுக்கிடையில் நடாத்திவரும் உதைபந்தாட்ட தொடரின் முதலாவது காலிறுதியாட்டம் நேற்று (சனிக்கிழமை) வல்வை சிதம்பராக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
VEDA வின் 2013 ஆம் வருடத்திற்கான தரம் 09, 10, 11 இற்குரிய புதிய வகுப்புக்கள்.
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2012 (சனிக்கிழமை)    
VEDA வின் 2013 ஆம் வருடத்திற்கான தரம் 09, 10, 11 இற்குரிய புதிய வகுப்புக்கள் இன்று ஆரம்பமாகின்றது. இதற்குரிய சம்பந்தப்பட்ட அறிவித்தல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
வல்வை விக்னேஸ்வரா முன்பள்ளி மற்றும் விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையம் இன்று திறந்துவைக்கப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 14/12/2012 (வெள்ளிக்கிழமை)     [photos]
இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக திரு.இ.த.ஜெயசீலன் (பிரதேச செயலாளர், வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை) அவர்கள் கலந்து சிறப்பித்தார். மற்றும் சிறப்பு விருந்தினர்களாக திருமதி.சாந்தினி திருஞானசுந்தரம்,திருமதி.சந்திராதேவி சுபாஷ்சந்திரன், மற்றும் திரு.S.தவனேஷ்வரன் ஆகியோர் கலந்து நிகழ்வினை சிறப்பித்தனர்.
[மேலும் வாசிக்க...]
வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் புதிய கட்டிடத்திறப்பு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2012 (வியாழக்கிழமை)     [photos]
புதிய கட்டிடத்திறப்பு விழா நாளை காலை 9 மணிக்கு திறக்கப்படும். இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக திரு .இ .த .ஜெயசீலன் (பிரதேச செயலாளர், வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை) கலந்து சிறப்பிக்கின்றார் .
[மேலும் வாசிக்க...]
இலங்கை ஹட்டன் நஷனல் வங்கியில் வேலை வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2012 (வியாழக்கிழமை)     [photos]
இலங்கை ஹட்டன் நேஷனல் (Hatton National Bank) வங்கியில் 'பயிற்சி பெறும் வங்கி உதவியாளர்' (Trainee Banking Assistant) தரத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. வங்கியின் சம்பந்தப்பட்ட விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
வல்வை உதயசூரியன் விளையாட்டு கழகத்தினது வரவேற்பு வளைவு புனரமைக்கப்பட்டு வருகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 12/12/2012 (புதன்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை மதவடியில் அமைந்திருக்கும் வல்வை உதயசூரியன் விளையாட்டு கழகத்தினது ஞாபகார்த்த வரவேற்பு வளைவு புனரமைக்கப்பட்டு வருகின்றது. இவ் வளைவானது அவ் விளையாட்டுக் கழக உறுப்பினர் திரு.இரா.அரசரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாக 1970 களின் பிற்பகுதிகளில் வல்வை உதயசூரியன் விளையாட்டு கழகத்தினால் அமைக்கப்பட்டிருந்தது.
[மேலும் வாசிக்க...]
இன்று 12 - 12 - 12 அதிஸ்ட நாள்?
பிரசுரிக்கபட்ட திகதி: 12/12/2012 (புதன்கிழமை)    
இன்று 12 ஆம் திகதி மார்கழி மாதம் 2012 ஆம் ஆண்டு ஆகும். நாள் மாதம் வருடம் ஆகிய முன்றும் 12 இல் வருவதாலும், இதே போல் ஒரு நாள் இனிமேல் வரமுடியாது என்பதாலும், இதை ஒரு அதிஸ்ட நாளாகக் கருதி உலகத்தின் பல பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நடைபெற்ற வண்ணமுள்ளன. இதற்கிடையில்
[மேலும் வாசிக்க...]
சிநேகபூர்வ உதைபந்தாட்ட போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டியது
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2012 (செவ்வாய்க்கிழமை)    
வல்வை விளையாட்டுக் கழகத்திற்கும் கொற்றாவத்தை சிவானந்தா விளையாட்டுக் கழகத்திற்கும் இடையிலான சிநேகபூர்வ உதைபந்தாட்ட போட்டி நேற்று (திங்கட்கிழமை) வல்வை பொது விளையாட்டரங்கத்தில் (Futsal - 5 Set foot ball ground) நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வை அ.மி.த.க பாடசாலையின் பரிசளிப்பு வைபவம் இன்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2012 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை அ.மி.த.க பாடசாலையின் பரிசளிப்பு வைபவம் இன்று பாடசாலையின் அதிபர் திரு.பூ.சத்திவேல் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இந்த பரிசளிப்பு நிகழ்வின் பிரதம விருந்தினராக திருமதி. இரஞ்சிதம் குட்டித்தம்பி (பிரதிக் கல்விப் பணிப்பாளர், கல்வி அபிவிருத்தி, வடமராட்சி வலயம்) அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
[மேலும் வாசிக்க...]
வல்வை கல்வி அபிவிருத்தி சங்கத்தின் (VEDA) கார்த்திகை மாதத்திற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2012 (திங்கட்கிழமை)    
வல்வை கல்வி அபிவிருத்தி சங்கத்தின் (VEDA) கார்த்திகை மாதத்திற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அறிக்கை இத்துடன் இணைக்கபட்டுள்ளது. வல்வை கல்வி அபிவிருத்தி சங்கம் வல்வையின் நலன் விரும்பிகளின் உதவியுடன், ஒரு செயற்குழுவின் கீழ் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
[மேலும் வாசிக்க...]
20 ஓவர்கள் கொண்ட மென்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டம் - வல்வை விளையாட்டுக்கழகம் தோல்வி
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2012 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
பொலிகை இளைஞர் விளையாட்டுகழகத்தினால் நடாத்தப்பட்ட 20 ஓவர்கள் கொண்ட மென்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டம் பொலிகை இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த இறுதியாட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து பொலிகை இளைஞர் விளையாட்டுக்கழகம் மோதியது.
[மேலும் வாசிக்க...]
யாழ் - கொழும்பு செல்லும் தனியார் பேருந்து நேற்று அதிகாலை ஆனையிறவில் தடம்புரண்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 08/12/2012 (சனிக்கிழமை)     [photos]
யாழ் - கொழும்பு செல்லும் குளிரூட்டப்பட்ட தனியார் சொகுசு பேரூந்து நேற்று அதிகாலை (சனிக்கிழமை ) ஆனையிறவில் வீதியைவிட்டு விலகி தடம்புரண்டது. இவ் விபத்திற்கு ஓட்டுனரின் கவனக்குறைவே காரணம் என சொல்லப்படுகின்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வை முத்துமாரியம்மன் அறநெறி பாடசாலையின் பரிசளிப்பு வைபவம் இன்று இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 08/12/2012 (சனிக்கிழமை)     [photos]
கடந்த மாதம் வல்வை மாணவ, மாணவியர்க்கு கட்டுரை, பண்ணிசை, பேச்சு ஆகியவற்றில் போட்டிகள் வல்வை முத்துமாரியம்மன் அறநெறிப்பாடசாலையினால் நடாத்தப்பட்டன. இந்த போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கான, பரிசுகள் இன்று (சனிக்கிழமை) வழங்கி கெளரவிக்கப்பட்டது.
[மேலும் வாசிக்க...]
நீச்சல் வீரர் நவரத்தினசாமி அவர்களுக்கு தொண்டைமானாற்றில் சிலை அமைப்பதற்கு முயற்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 08/12/2012 (சனிக்கிழமை)    
நீச்சல் வீரர் நவரத்தினசாமி அவர்களுக்கு தொண்டைமானாற்றில் சிலை அமைக்க வல்வெட்டித்துறை நகரசபையால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. தொண்டைமானாறைச் சேர்ந்த திரு.முருகுப்பிள்ளை நவரத்னசாமி (நீச்சல் வீரன் நவரத்னசாமி) அவர்கள் 1954 ஆம் ஆண்டிலே பாக்கு நீரிணையை 28 மணி நேரத்தில் ஒருவழி கடந்து சாதனை படைத்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டித்துறை பற்றிய எனது சிந்தனைகள் - கலாநிதி சபா இராஜேந்திரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/12/2012 (சனிக்கிழமை)    
வல்வை மக்களில் அன்று காணப்பட்ட சக்தியின் அளவு (energy level) குறைந்து காணப்படுகிறது. அமைதியாக இருக்கும் ஒரு குளம் போல இருக்கிறது. ஒரு ஆற்றின் சக்தி இங்கே காணப்படவில்லை. ஆனாலும் சிறுசிறு குழுக்களாகச் செயலாற்றும்போது சக்தி வெளிப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஊர் முழுவதும் ஒன்றுபட்டு சக்தியை வெளிப்படுத்துவதை காணமுடியவில்லை.
[மேலும் வாசிக்க...]
சிதம்பராக் கல்லூரிக்கு இரசாயன கற்கை நெறி உபகரணங்கள் நேற்று வந்தடைந்திருக்கின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 07/12/2012 (வெள்ளிக்கிழமை)     [photos]
சிதம்பராக் கல்லூரி நலன் புரிவோர் வலயமைப்பினர், வல்வை சிதம்பராக் கல்லூரியில் நடந்தேறி வரும் ஆய்வு கூடம் சம்பந்தமாக வெளியிட்டிருக்கும் அறிக்கை பின்வருமாறு. "பௌதிகவியல் மற்றும் உயிரியல் ஆய்வுகூட வேலைகள் நிறைவு பெற்றதையும், பௌதீக கற்கை நெறி உபகரணங்கள் ஏற்கனவே வந்தடைந்ததையும் அறிந்திருப்பீர்கள்.
[மேலும் வாசிக்க...]
யா/வல்வை சிவகுருவித்தியாசாலையில் இடம் பெற்ற நான்கு ஆசிரியர்களுக்கான பிரியாவிடை
பிரசுரிக்கபட்ட திகதி: 06/12/2012 (வியாழக்கிழமை)     [photos]
யா / வல்வை சிவகுருவித்தியாசாலையில் இடம் பெற்ற நான்கு ஆசிரியர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று (வியாழக்கிழமை ) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு.சிவநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
அனைத்து பாடசாலைகளிலும் மூன்றாம் தவணைக்கான விடுமுறை நாளையிலிருந்து (07/12/2012) ஆரம்பிக்கின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 06/12/2012 (வியாழக்கிழமை)    
விடுமுறை காலம் நாளையிலிருந்து ஆரம்பித்து (07/12/2012) மீண்டும் அடுத்த வருடம் (01/ 01/2013) இல் முடிவடைகின்றது. 02/01/2013 இல் (புதன்கிழமை) மறுபடியும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுகின்றது.
[மேலும் வாசிக்க...]
நிலுவையிலிருந்த வல்வை நெற்கொழு மைதானப் பிரதேசத்தை கையகப்படுத்த நீதிமன்றம் அனுமதி - விளையாட்டு அரங்கு அமைக்க முயற்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2012 (திங்கட்கிழமை)     [photos]
இதுவரை நீதிமன்றில் நிலுவையிலிருந்து வந்த, வல்வை நெற்கொழு மைதானப் பிரதேசத்தை கையகப்படுத்த பருத்தித்துறை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
[மேலும் வாசிக்க...]
யாழில் திறக்கப்படவுள்ள முதலாவது உதைபந்தாட்ட விளையாட்டரங்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2012 (திங்கட்கிழமை)    
யாழ்ப்பாணம் அரியாலையில் A9 நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள உதைபந்தாட்ட விளையாட்டரங்கு, இந்த மாதக் கடைசியில் FIFA வின் (Fedaration International of Football Association), தலைவர் 'Sepp Blatter' அவர்களால் திறக்கப்படவுள்ளது. சுமார் USD 400,000 (5 கோடி இலங்கை நாணயம்) செலவில் அமைக்கப்பட்டுள்ளது இவ் விளையாட்டரங்கு.
[மேலும் வாசிக்க...]
வல்வை ரேவடி விளையாட்டுகழகம் இறுதியாட்டத்தில் வெற்றிபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 02/12/2012 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை ஊக்குவிப்பு குழுவினால் நடாத்தப்பட்டுவரும் உதைபந்தாட்ட தொடரின் இறுதியாட்டம் மற்றும் மூன்றாம் இடத்திற்கான ஆட்டம் இன்று (ஞாயிற்றுகிழமை) வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுகழக மைதானத்தில் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டித்துறை ஊரிக்காட்டிலுள்ள சாய் நிலையத்தின் மூன்றாவது ஆண்டு விழா அனுஸ்டிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 01/12/2012 (சனிக்கிழமை)    
வல்வெட்டித்துறை ஊரிக்காட்டில் சாய் நிலையத்தின் மூன்றாவது ஆண்டு விழா நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. காலை 8.30 தொடங்கி நண்பகல் வரை நீடித்த இந்த நிகழ்வில் சில அரச அதிகாரிகள் உட்பட, நிலைய அதிகாரிகள் பலர் கலந்து சிறப்பித்திருந்தார்கள். நிகழ்வில் பஜனை மற்றும் கலை நிகழ்வுகள் நடை பெற்றிருந்தது.
[மேலும் வாசிக்க...]
சிநேகபூர்வ உதைபந்தாட்டபோட்டியில் வல்வை விளையாட்டுகழகம் வெற்றியீட்டியது
பிரசுரிக்கபட்ட திகதி: 01/12/2012 (சனிக்கிழமை)    
வல்வை பொதுவிளையாட்டு மைதானத்தில் (Futsal ground, i.e 5 a-side football) நடைபெற்ற முதலாவது போட்டியில் வல்வை விளையாட்டு கழகத்தை எதிர்த்து கரவெட்டி கலட்டி விளையாட்டுகழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் வல்வை விளையாட்டுகழகம் 11 : 7 என்ற கோல்கணக்கில் வெற்றியீட்டியது.
[மேலும் வாசிக்க...]
முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ள 'War Museum - 2'
பிரசுரிக்கபட்ட திகதி: 01/12/2012 (சனிக்கிழமை)     [photos]
முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு பகுதியில் அமைக்கபட்டுள்ள 'War Museum' மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளைப் பார்வையிடுவதற்கு தற்பொழுது அனுமதி வழங்கப்பட்டதையடுத்து குறிப்பிடக்கூடிய மக்கள் அப் பிரதேசங்களைப் பார்வையிட்டு வருகின்றனர்.
[மேலும் வாசிக்க...]
புதுக்குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள 'War Museum - 1'
பிரசுரிக்கபட்ட திகதி: 30/11/2012 (வெள்ளிக்கிழமை)     [photos]
புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களின் தங்குமிடம் எனக் கருதப்படும் பாதுகாப்பான மறைவிடத்தைப் பார்ப்பதற்கு தற்பொழுது அனுமதிக்கபட்டதையடுத்து குறிப்பிடக்கூடிய மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
[மேலும் வாசிக்க...]
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வல்வை ரேவடி விளையாட்டுகழகம் வெற்றியிட்டியது
பிரசுரிக்கபட்ட திகதி: 30/11/2012 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வை ஊக்குவிப்பு குழுவினால் நடாத்தப்பட்டு வரும் உதைபந்தாட்ட தொடரில் இன்று நடைபெற்ற அரைஇறுதி ஆட்டத்தில் வல்வை ரேவடி விளையாட்டுகழகத்தை எதிர்த்து வல்வை நேதாஜி விளையாட்டுகழகம் மோதியது.
[மேலும் வாசிக்க...]


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
5
6
7
8
9
10
11
1213
14
15161718
19
20
21
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai