பதுளையில் பாரிய மண் சரிவு, 150 பேருக்கு மேற்பட்டோர் அகப்பட்டிருக்கலாம், அசாதரான காலநிலை மீட்பு பணிக்கு தடங்கல்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/10/2014 (புதன்கிழமை)
இலங்கையின் பதுளை கொஸ்லாந்த மீரியபெத்தையில் இன்று காலை ஏற்பட்ட பாரிய மண்சரிவில் 150 பேருக்கு மேபட்டோர் சிக்குண்டிருக்கலாம் என செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் உயிரிழந்தவர்களின் 14 சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இந்த மண்சரிவு இன்று காலை 7 மணிக்கும் 7.30க்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதுளை கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக 7 லயன் குடியிருப்புகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதுடன் பலர் காணாமற்போயுள்ளதாகவும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
மீரியபெத்தையில் ஆற்று பள்ளத்தாக்கை அண்மித்தாக உள்ள 7,8,9,10,11 மற்றும் 12ஆம் இலக்க லயன்குடியிருப்புக்களே மண்ணில் புதையுண்டுள்ளன.
பால் சேகரிக்கும் நிலையங்கள், இரண்டு வாகனங்கள் திருத்தும் இடம், இரண்டு கடைகள், மருத்துவமாது குடும்பம் தங்கியிருந்த விடுதி, சாரதியின் வீடு சிகிச்சை நிலையம் மற்றும் கோவில் ஆகியனவும் மண்ணில் புதையுண்டுள்ளன. இவற்றில் தங்கியிருந்தவர்களும் மேலே குறிப்பிட்ட 66 குடும்பங்களைச் சேர்ந்த பலரே காணாமல் போயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்படும் என்று அனர்த்த முகாமைத்துவப் பணியகம் முன்கூட்டியே எச்சரிக்கை விடப்பட்டமையால் பலர் பாதுகாப்பான இடங்களுக்கு முன்கூட்டியே இடம்பெயர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று மாலை ஏற்பட்ட அசாதாரண காலநிலையால் புதையுண்டவர்களை மீட்கும் பணி தடைபட்டுள்ளதாகவும், மீண்டும் மீட்கும் பணி நாளை காலை ஆரம்பமாகும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் (Disaster Management Minister) மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.