உயிரோடு வாழும் 179 வயது மனிதர், இந்தியாவின் வாரணாசியில் வாழ்கிறார்?
பிரசுரிக்கபட்ட திகதி: 19/11/2014 (புதன்கிழமை)
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள வாரணாசியில் 179 வயதுள்ள உலகிலேயே மிக அதிகமான வயதுடைய ஒரு மனிதர் வாழ்கிறார் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மகாஸ்தா முராசி (Mahashta Murasi) என்பவர் 1835 ஆம் ஆண்டு பிறந்ததாக தன்னைக் குறிப்பிடுவதனால், உலகில் இந்த திகதி வரை மிகவும் வயதான மனிதர் ஆகின்றார்.
மேலும் இவர் குறிப்பிடும் ஆண்டில் இவர் உண்மையாகவே பிறந்திருந்தால் உலக கிண்ணஸ் புத்தகத்தின் (Guinness Book of World Records) பிரகாரமும் இவர் தான் இதுவரை உலகில் அதிகூடிய வயதில் வாழும் நபரும் ஆவார்.
அதிகாரபூர்வமான தகவல்களின்படி பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் கி.பி. 1903 ஆம் ஆண்டு முதல் வாரணாசியில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
1957 ஆம் ஆண்டு வரை காலணி தைப்பவராக அதாவது 122 வயது வரையில் அந்தப் பணியை செய்துவிட்டு ஓய்வு பெற்றுவிட்டார்.
மகாஸ்தா முராசியின் பிறப்பு சான்றிதழ், அடையாள அட்டைகள் அனைத்துமே அவர் 1835ஆம் ஆண்டு பிறந்தவர்தான் என்கின்றன. ஆனால் இதுவரை இவர் 179 வயதுக்காரர் என்பதை உறுதிப்படுத்த எந்த ஒரு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.