110 கிலோகிராமுக்கும் அதிகமான குஷ் மற்றும் ஹாஷ் போதைப்பொருட்களைக் கடத்த முயன்ற, பாங்கொக்கிலிருந்து வந்த இலங்கையை சேர்ந்த 22 இளம் பெளத்த பிக்குகள், கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்படுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்குக் கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், இந்தக் குழுவினர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இலங்கை முழுவதிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் வசித்து, பலதரப்பட்ட கல்வி நிறுவனங்களில் உயர்கல்வியைத் தொடரும் இளம்துறவிகள் ஆவர்.
ஒரு விளம்பரதாரர் வழங்கிய விமான டிக்கெட்டுகளில் அவர்கள் அந்த நாட்டிற்குப் பயணம் செய்ததையும், அங்கு இருந்தபோது, அவர்கள் சாமானிய மக்களைப் போல் நடித்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டதையும், அப்போது அவர்களின் கைபேசிகளில் புகைப்படங்களும் காணொளிகளும் பதிவு செய்யப்பட்டதையும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இவை ரூ. 1.1 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் பாடசாலை பொருட்கள், பலவிதமான இனிப்புகள் ஆகியவற்றைக் கொண்ட போலிப் பெட்டிகளைத் தயாரித்து, தங்கள் பயணப் பைகளில் 110 கிலோகிராமுக்கும் அதிகமான 'குஷ்' மற்றும் 'ஹாஷ்' போன்ற போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்துள்ளனர்.(newswire)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.