அமரர். திருமதி. சாம்பசிவம்.இந்திராணி அம்மா (மதுரை) அவர்களின் அந்தியேட்டி கிரியையும் நன்றி நவிலலும்.
பிரசுரிக்கபட்ட திகதி: 15/04/2015 (புதன்கிழமை)
அந்தியேட்டி கிரியையும் நன்றி நவிலலும்.
மலர்வு- 27.04.1936 உதிர்வு-18.03.2015
குடும்பத்தில் குத்து விளக்காக, மங்களமாக வாழ்ந்தீர்கள். நாம் மங்களமாக வாழ்வதில் மகிழ்ச்சி கண்டீர்கள். நீங்கள் காட்டிய உயரிய வழியில் உங்கள் சீரிய பண்பின் வழிப்பாதையில் நாங்கள் என்றென்றும் உங்கள் ஆசியுடன் வாழ்வோம்.
கடந்த (19-03-2015) அன்று இறைபாதமடைந்த எமது அன்புத் தெய்வம் அமரர். திருமதி. சாம்பசிவம்.இந்திராணி அம்மா (மதுரை) அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 17.04.2015 (வெள்ளிக்கிழமை) காலை 5.00 மணிக்கு ஊறணி தீர்த்தக்கரையில் நடைபெறும். தொடர்ந்து அன்னாரின் இல்லத்தில்(லக்ஷ்மி பவனம், கே .கே. எஸ் .றோட், ஊரிக்காடு, வல்வெட்டித்துறை) மதியம் நடைபெறும் கிரியையிலும், அதனைத் தொடர்ந்து இடம்பெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மற்றும் அன்னாரின் மரணச்செய்தி கேட்டு மரணச்சடங்கில் நேரில் கலந்து கொண்டோருக்கும், தொலைபேசி மூலம் ஆறுதல் கூறியோருக்கும் மற்றும் பல்வேறு வழிகளில் உதவிகள் புரிந்தோரிற்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தகவல் – கணவர் – சாம்பசிவம் (அம்மன் கோவில் முன்னாள் தர்மகர்த்தா) மகன்மார் - சா.மகேந்திரதாஸ், சா.பரந்தாமன்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Vicky (United Kingdom)
Posted Date: April 16, 2015 at 01:41
அன்புள்ள விக்கி மாமாவுக்கு,
வணக்கம்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.