மைத்திரி 100 நாள் திட்டத்தில் கூறியபடி எதிர்வரும் 29ஆம் திகதி சமர்பிக்கபடவுள்ள இடைக்கால பட்ஜெட்டில் அரசாங்க ஊழியர்களுக்கு முதற்கட்டமாக ரூபா 5000 ஆல் சம்பளம் அதிகரிக்கபடவுள்ள இதேவேளை இன்னுமோர் ரூபா 5000 சம்பள அதிகரிப்பு ஜூன் மாதமளவில் வழங்கப்படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பள அதிகரிப்பானது கடந்த ராஜபக்ஷ அரசு வழங்கிய வாழ்க்கை செலவு அதிகரிப்பு படிக்கு மேலதிகமாக வழங்கபடுவதாகவும், இந்த சம்பள அதிகரிப்பானது வாழ்க்கை செலவு அதிகரிப்பு படியில் அதிகரிப்பாக இல்லாமல் நேரடியாக சம்பளத்தில் அதிகரிப்பாக இருக்குமென்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
அதேவேளை தனியார் துறையினருக்கு சம்பள அதிகரிப்பை தன்னால் பரிந்துரைக்க முடியாதென்றும், அவ்வாறு சம்பள அதிகரிப்பை கட்டாயபடுத்தினால் கம்பெனிகள் மூடவேண்டியநிலை ஏற்படுமென்றும், தற்போதைய நிலையில் திறைசேரியில் தனியார் துறையினருக்கு சம்பள அதிகரிப்பை வழங்க பணமில்லையென்றும் தெரிவித்தார்.
இருந்தாலும் தனியார்துறையினரை பற்றி கலந்தாலோசிக்கவுள்ளதாகவும், வாழ்க்கை செலவை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபடபோவதாகவும் , நாட்டின் பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்படாது மக்களுக்கு உச்ச கட்ட சலுகைகளை வழங்க எதிர்பார்த்துள்ளத்தாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.