வடமாகாணத்தில் தொடர்ந்து 8ஆவது ஆண்டாகவும் யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சியினை (8th Jaffna International Trade Fair) நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
இது வடக்கிலுள்ள மக்களால் மிகப் பாரிய கண்காட்சி மற்றும் நுகர்வோர் சந்தை நிகழ்வாக கருதப்ப டுகின்றது.
இந்த கண்காட்சி 2017ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகித வரை மூன்று நாட்கள் யாழ் மாநகர சபை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
யாழ் மாநகரசபை, இலங்கை மாநாட்டு பணியகம் மற்றும் சர்வதேச வர்த்தக சபை ஆகியவற்றின் ஆதரவில் யாழ்ப்பாண வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் இணைந்து இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவை நிறுவனத்தினால் (Lanka Exhibition & Conference Services (Pvt) Ltd) JITF2017 நிகழ்வு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதரகம் மற்றும் தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் இதற்கு அங்கீகாரம் அளித்துள்ளன.
பரந்த அளவிலான முதலீட்டாளர்கள் மற்றும் மக்கள் கலந்துகொள்ளும் இந்த கண்காட்சி நிகழ்விற்கு 2016ஆம் ஆண்டு 60000இற்கு மேற்பட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
நிர்மாணம், விருந்தோம்பல் , உணவு, பானவகை , மற்றும் பொதியிடல் ,மோட்டார்வாகனம் , தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், நிதியியல் சேவைகள் , ஆடையணி மற்றும் புடவை , விவசாயம், நுகர்வோர் உற்பத்திகள் மற்றும் பல தொழிற்துறைகள் இந்த கண்காட்சியில் இடம்பெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.