கனடாவில் "இலங்கைத் தமிழரின் வரலாற்றுச் சுவடுகள்" என்னும் நூல் வெளியீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/08/2016 (வியாழக்கிழமை)
இலங்கைத் தமிழரின் வரலாற்றுச் சுவடுகள் என்ற நூல் ஒக்டோபர் 8ம்திகதி சனி பிற்பகல் 3.00மணி - 6.00மணிவரை ஸ்கார்பரோ நகரசபை மண்டபத்தில் Scarborough Civic Center, 150 Borough Drive, (Macowan and Ellesmear Road) என்னும் முகவரியில் வெளியிடப்பட உள்ளது.
புலம்பெயர்ந்த நாடுகளில்வாழும் இளைய தலைமுறையினர் எமது அடிப்படை வரலாற்றை சுருக்கமாக அறிவதற்கு வசதியாக, இலங்கைத் தமிழர் வரலாற்றுச் சுவடுகள் என்ற தலைப்பில் சமயம், வரலாறு, இலக்கியம் சம்பவங்கள், அரசியல் என்பன அடங்கியதோடு ஆங்கிலத்திலும் மொழியாக்கம் கொண்டது இந்நூல்.
நாம் சேகரித்த வரலாற்று நூல்களை ஆதாரமாகவும், எமது காப்பகத்தில் உள்ள புகைப்படங்களில் இவற்றிற்குப் பொருத்தமான நூற்றி ஐம்பது வர்ணப் படங்களையும் அடக்கியுள்ள நூலாகும். மேலும் படைப்பாளிகள் கழகத்தலைவர் திரு.நக்கீரன் அவர்களின் அணிந்துரையும் திரு.கனக.மனோகரன் அவர்களின் ஆசியுரையும், நூறு தலைப்பில் இருநூற்றி இருபது பக்கங்களில் அமைந்துள்ளது. மேலும் எமது செல்வர்கள் ந.சந்துரு, ந.சௌமியன் ஆகியோரின் பத்தாவது ஆண்டு நினைவு சமர்ப்பண நூலாக பதியப்பட்டுள்ளது.
வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம் Images of Valvai என்ற அமைப்பினை தாய கத்தில் ஐந்தாவது வருடமாக நடத்திவரும் நம் இருவராலும் ஆக்கப்பட்டது.
வரலாற்று ஆவணக் காப்பகத்தை நேசிப்பவர்கள், மாணவர்கள், இலக்கிய நண்பர்கள், மற்றும் நூல்வெளியீட்டிற்கு வரவிரும்புவோர் இந்நூலை பெறவிரும்பும் ஆர்வலர்கள் எம்முடன் தொடர்புகொள்ளவும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (Canada)
Posted Date: August 13, 2016 at 11:24
வாழ்த்துக்கள் !இக்காலத்தின் கட்டாய தேவைகருதி உங்கள் முயற்ச்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் !!புலம்பெயர்ந்து வாழும் எமது இளையதலைமுறை குழந்தைகளுக்கு நாம் யார் என்பதும் .தமிழ்மொழியின் பெருமையும் எமது உண்மையான வரலாறும் தெளிவுபடுத்தபடவேண்டியது காலத்தின் கட்டாயம் வாழ்த்துக்கள் .
k.S.Thurai (Denmark)
Posted Date: August 12, 2016 at 19:27
உங்கள் முயற்சி மிகவும் மகிழ்வு தருகிறது..
நூல் வெளியீடு வெற்றிபெற இதயத்தால் வாழ்த்துகிறேன்..
வாழ்க.. வாழ்க..
முடிந்தால் எனக்கும் ஒரு பிரதி அனுப்புக..
புத்தகங்களை வாசிப்போரிடம் சேர்ப்பதே வெற்றிக்கு வழி..
நான் ஒரு நல்ல வாசகன்..
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.