வல்வை மானாங்கனை ஒன்றியத்தின் அனுசரணையில் கம்பிகளின் மொழி பிறேம் எழுதிய 'மறந்திடுமோ மனதை விட்டு' கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது நேற்று சனிக்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு, வல்வை அமரிக்கன் மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு முத்துஐயன்கட்டு வலதுகரை மகா வித்தியாலய அதிபர் சி.நாகேந்திரராஜா தலைமை ஆரம்பித்த வெளியீட்டு விழாவிற்கு வரவேற்பு நடனத்தினை சிதம்பரேஸ்வரா நடனாலயப் பள்ளி இயக்குநர் செந்தூர்ச்செல்வனும், தமிழ் மொழி வாழ்த்தினை மாணவிகள் கிசானி, லோஜினி, ரிதர்சனா ஆகியோரும், வாழ்த்துக் கவியினை கவிஞர் குடத்தனையூரான் சிவாவும் வழங்கினார்கள்.
தொடர்ந்து ஆசியுரையினை படைப்பாளர் சமரபாகு சீனா உதயகுமார் அவர்களும், நூலினை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் வெளியிட்டு வைக்க முதற்பிரதியினை சிறீதரன் ஜெயமாலா அவர்கள் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து பிரதிகள் வழங்கப்பட்டன. நூல் மற்றும் நூலாசிரியர் அறிமுக உரையினை செல்லமுத்து வெளியீட்டகம் இயக்குநர் யோ.புரட்சி நிகழ்த்தினார். இந்த வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளை காவ்ய பிரதீபா வன்னியூர் செந்தூரன் தொகுத்து வழங்கினார்.
நூலின் ஆய்வுரையினை கவிஞர் பொலிகையூர் சிந்துதாசனும், பிரதம விருந்தினர் உரையினை நிகழ்வின் பிரதம விருந்தினர் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களும், சிறப்புரையினை வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களும் உரை நிகழ்த்தினார்கள். அத்துடன் வாழ்த்துரையினை வடமாகாண சபை உறுப்பினர் சிவயோகநாதன் நிகழ்த்தினார்.
ஒளிஅரசி சஞ்சிகை ஊடக அனுசரனையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏற்புரையினை நூலாசிரியர் கம்பிகளின் மொழி பிறேம் வழங்கினார். இந்த நூலினை விஜய் அச்சுப் பதிப்பகம் அச்சேற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கவிஞர் கம்பிகளின் மொழி பிறேம் அவர்கள் கடந்த வருடம் காய்ந்து போகாத இரத்தக் கறைகள் எனும் குறுநாவலை வெளியீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
k.S.Thurai (Denmark)
Posted Date: August 14, 2016 at 19:57
மனமார்ந்த வாழ்த்துக்கள்..
இதுபோன்ற நிகழ்வுகளை தொடர்ந்து முன்னெடுங்கள்...
வாசித்தவர்கள் தவறாது அதுபற்றி எழுதுங்கள்..
வாசிக்கும் பழக்கமே வாழ்வை மேன்மைப்படுத்துகிறது.. அன்பான வல்வை உறவுகளே நூல்களை தவறாது வாசியுங்கள்.
வெளிநாடுகளில் வல்வை மக்களிடையே நூல்களை வாசிக்கும் பழக்கம் பெரிதும் வீழ்ந்துள்ளது..
சென்ற மாதம் ஒரு வல்வை நண்பருக்கு முக்கியமான இரண்டு நூல்களை அன்பளிப்பாக கொடுத்தேன் கொடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு போய்விட்டார், இன்று வரை மறந்துவிட்டேன் என்று கூட போன் செய்யவில்லை.. இதுதான் பெரும்பான்மை வெளிநாடு வாழ் வல்வையர் வாசிப்பின் யதார்த்த நிலை..
ஆகவே மக்களை வாசிக்கவும் தூண்டுங்கள்..
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.