வல்வெட்டிதுறையைச் சேர்ந்த திரு.வெங்கடச்சலம் அருமைச்சந்திரன், இவருக்கு வயது 60. விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர். மினி அப்பா என்று அழைக்கப்படும் இவரின் 2 பிள்ளைகளும் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களாக இருந்து கடந்த யுத்தங்களின் போது மரணமடைந்தவர்கள்.
திரு. அருமைச்சந்திரன் மனைவியும் சில வருடங்கள் முன்பு புற்று நோய் காரணமாக மரணமடைந்துள்ளார்.
இவ்வாறு அநாதரவான நிலையில் வல்வெட்டிதுறைச் சந்தியில் அமைந்துள்ள உடைந்த கடை கட்டடம் ஒன்றில் தங்கி வந்திருந்த இவர், கடந்த 3 நாட்களாக நோய் காரணமாக எதுவிதமான உணவு, நீர் அருந்தாமல் வருந்திய நிலையில் இன்று வல்வெட்டித்துறை ஆட்டோ சங்கத்தின் உதவியால் அம்புலன்ஸ் ஒன்றின் உதவியுடன் வல்வெட்டித்துறை மாவட்ட வைத்தியசாலையில் தற்பொழுது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கீழே படங்களில் நோய் வாய்ப்பட்ட அருமைச்சந்திரன் அம்புலன்ஸ் இல் ஏற்றப்படுவதை காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.