கொழும்பு உட்பட 8 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு வெள்ளிவரை விடுமுறை
பிரசுரிக்கபட்ட திகதி: 29/05/2017 (திங்கட்கிழமை)
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் அசாதாரண காலநிலை காரணமாக அனர்த்தங்களுக்கு உள்ளாகியுள்ள 8 மாவட்டங்களிலும் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, ஹம்பாந்தோட்டை, ரந்தனபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் 2 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளன.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (Disaster Management Center) தகவல்களின் படி வெள்ளம் மற்றும் நிலச்ச்சரிவு காரணமாக இதுவரை 166 பேர் மரணமடைந்துள்ளனர் மற்றும் 104 இன்னும் காணாமல் போயுள்ளனர்.
கடும் மழை மற்றும் பலத்த காற்றுக் காரணமாக 400,000 பாதிக்கப்பட்டுள்ளதுடன் 100,000 ற்கு அதிகமானோர் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் அமைக்கபட்டுள்ள 304 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.