சூறாவளி காரணமாக வடமராட்சி கரையோரங்களில் பலத்த காற்று
பிரசுரிக்கபட்ட திகதி: 21/05/2020 (வியாழக்கிழமை)
நாட்டின் வானிலையில் 'AMPHAN' சூறாவளியின் தாக்கம் இன்றிலிருந்து குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
'AMPHAN' என்ற சூறாவளியானது நேற்று (2020 மே 20ஆம் திகதி) முற்பகல் 08.30 மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 1420 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 19.80 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 87.70 நு இற்கும் இடையில் வடமேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கும் அண்மையாகவுள்ள கடற்பரப்புகளுக்கும் மேலாக மையம் கொண்டிருந்தது.
இது வடக்கு – வடகிழக்கு திசையில் இலங்கையை விட்டு விலகி நகர்ந்து நேற்று (மே 20ஆம் திகதி) பிற்பகலளவில் வங்காளதேசக் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்பட்டது.
இதேவேளை குறித்த சூறாவளி காரணமாக யாழின் வடமராட்சி கரையோரப் பிரதேசங்களில் நேற்றும் இன்றும் தொடர்ந்து பலத்த காற்று வீசி வருகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.